வியாழன், 19 ஜூன், 2014

** பித்தன் என்பவன் யார்?

* பரமேஸ்வரனுக்கு, “பித்தன்’ என்ற ஒரு பெயருமுண்டு. இவருக்கு பிடித்துள்ள பித்து என்ன? உயிர்களை தம் பக்தர்களாக ஆக்குவதில் பெரும் பித்தனாக இருக்கிறார். இந்த பித்தானது கருணை வடிவாகி, அருள் பெருகி, பல பக்தர்களை அவன்பால் பித்து பிடிக்கும்படி செய்கிறது.
அதீதமான பற்றுதலை பித்து என்பர். பணம், பணம் என்று அலைபவர்களை, “பணப்பித்து’ என்கின்றனர். சிவனையே நினைத்து பக்தி செய்பவர்களையும் பித்தன் என்பர்.
பகவானைப் புகழ்ந்து பாடி வழிபட்டால், அவனை சந்தோஷப்படுத்தினால், அவன் பல சம்பத்துக்களையும் அளித்து, சம்சார பந்தத்திலிருந்து நம்மை விடுவிக்கிறான்; பக்தர்களை ரட்சிக்க வேண்டியதை தன் பொறுப்பாகவே ஏற்றுக் கொள்கிறான். கஷ்டம், மரணம் என்பதெல்லாம் சாதாரண மக்களுக்குத் தான். அதை கண்டு அவர்கள் பயப்படுவர்; ஆனால், அவைகளைக் கண்டு பக்தர்கள் பயப்படுவதில்லை. பக்தர்களுக்கு வளமையோ, செழுமையோ எதுவும் தெரியாது; தெய்வத்தின் அருளே அவர்களது செல்வம்.
சிவனார் ஆலகால விஷம் உண்டார். எதற்காக? அந்த விஷம் வெளியில் இருந்தால் உலகத்துக்கு ஆபத்து என்பதற்காக. இது அவரது கருணையல்லவா! தெய்வத்தை வழிபட்டு, நெறியான வாழ்க்கை வாழ்ந்து, கடவுள் வழிபாட்டில் தீவிரமாக இருப்பவர்களை எந்தவித துன்பமும் பாதிப்பதில்லை.
பாண்டிய மன்னன், மாணிக்க வாசகரை பலவிதமாக துன்புறுத்தினான். ஆனால், அவர் கலங்கவில்லை. பகவானை நம்பினார். பிரகலாதனும் பலவித துன்பங்களுக்கு ஆளாக்கப்பட்டும் வருத்தப்படவே இல்லை.
* தெய்வீக இன்பத்தில் திளைத்திருப்பவர்களுக்கு சரீர துன்பம் எதுவுமே தெரியாது!
தபஸ்விகள் தவம் செய்யும்போது, ஈ, எறும்பு கடித்தாலும், அதை அவர்கள் அறிய மாட்டார் கள். மனம் கடவுளிடம் இருக்கும்போது சரீர இன்ப, துன்பங்கள் அவர்களது தியானத்தை கலைப்பதில்லை.
* ஒரு தபஸ்வியின் கழுத்தில் ஒரு செத்த பாம்பை போட்டான் பரீட்சித்து மன்னன். ஆனால், அந்த தபஸ்விக்கு அது தெரியவே இல்லை. அவர் மனம் தவத்தில் ஈடுபட்டிருந்தது.
தன்னை மறந்து பகவானிடம் மனதை வைப்பவர்களுக்கு வெளியில் அல்லது தன்னைச் சுற்றிலும் என்ன நடக்கிறது என்பதே தெரியாது.
* ஒருவர் வாசற்படியின் அருகில் திண்ணையில் உட்கார்ந்து ஜெபம் செய்து கொண்டிருக்கிறார். அவருக்கு எதிரில் ஒரு மாடு போகிறது. ஆனால், அதோ, மாடு போகிறது என்ற எண்ணம் அவர் மனதில் தோன்றவில்லை.
* ஒருவன் வந்து, “ஐயா! இந்த பக்கம் ஒரு மாடு போயிற்றா?’ என்று கேட்டான். அவர், “தெரியலையே! நான் கவனிக்கவில்லையே…’ என்றார். இவரது கண் முன் ஒரு மாடு போயிருக்கிறது; ஆனால், விழித்திருந்தும் அவர் அந்த மாட்டை கவனிக்கவில்லை; காரணம், அவரது மனம் முழுவதுமாக பக்தியில் ஈடுபட்டிருந்தது.
மனம் எதில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறதோ, அப்போது மற்ற விஷயங்கள் மனதில் படுவதில்லை. இப்படி மெய்மறந்து பக்தி செய்ய வேண்டும்!
UnlikeUnlike ·  · 

டவுசர்

பெண் : டாக்டர் என்னோட ரெண்டு வயசு பையன் இன்னும் எப்பவும் விரல் சூபபுரான் .

டாக்டர் : ஒன்னும் problem இல்லை.....சரி பண்ணிடலாம்

பெண் : ரொம்போ கேவலமா இருக்கு டாக்டர் ...எவ்வளோ செலவு ஆனாலும் பரவாயில்லை

டாக்டர் : ஒன்னும் செலவு இல்லை ...ரெண்டு வயசு பையனுக்கு ஒரு பெரிய பையனோட ...... டவுசர மாட்டி வுட்டுடு....அவ்வளோதான்

பெண் : (குழப்பமாக )......எதுக்கு டாக்டர்...?????

டாக்டர் : அந்த டவுசர் அவனுக்கு லூசா இருக்கும் ...
 அதை கீழே விழாமே மேலே இழுத்து விடுறதே அவன் வேலையா இருக்கும் விரல் சூப்ப டைம் இருக்காது.......

புதன், 18 ஜூன், 2014

ஒவ்வொரு நொடியும் வாழ்


ஒரு கிராமத்தில் வசித்து வந்த ஒரு மனிதன் இறந்து விட்டான். அவன் அதை உணரும் போது கையில் ஒரு பெட்டியுடன் கடவுள் அவன் அருகில் வந்தார்.

கடவுள்: "வா மகனே........நாம் கிளம்புவதற்கான நேரம் நெருங்கி விட்டது......."
ஆச்சரியத்துடன் மனிதன் "இப்பவேவா? இவ்வளவு சீக்கிரமாகவா? என்னுடைய திட்டங்கள் என்ன ஆவது?"

"மன்னித்துவிடு மகனே........உன்னைக் கொண்டு செல்வதற்கான நேரம் இது........."
"அந்தப் பெட்டியில் என்ன உள்ளது?"
"உன்னுடைய உடைமைகள்........."
"என்னுடைய உடைமைகளா!!!.......அதாவது என்னுடைய பொருட்கள், உடைகள், பணம்,.............?"

"இவை அனைத்தும் உன்னுடையது அல்ல........ அவை பூமியில் நீ வாழ்வதற்கானது........."
"என்னுடைய நினைவுகளா?............."

"அவை கண்டிப்பாக உன்னுடையது கிடையாது.........அவை காலத்தின் கோலம்........"
"என்னுடைய திறமைகளா?..........."

"அவை கண்டிப்பாக உன்னுடையது கிடையாது.........அவை சூழ்நிலைகளுடன் சம்பந்தப்பட்டது......."
"அப்படியென்றால் என்னுடைய குடும்பமும் நண்பர்களுமா?......"

"மன்னிக்கவும்...........குடும்பமும் நண்பர்களும் நீ வாழ்வதற்கான வழி.........."
"அப்படி என்றால் என் மனைவி மற்றும் மக்கள்?"
"உன் மனைவியும் மக்களும் உனக்கு சொந்தமானது கிடையாது......... அவர்கள் உன் இதயத்துடன் சம்பந்தப்பட்டவர்கள்............"

"என் உடல்?..........."
"அதுவும் உன்னுடையது கிடையாது..........உடலும் குப்பையும் ஒன்று........."
"என் ஆன்மா?"
"இல்லை........அது என்னுடையது.........."

மிகுந்த பயத்துடன் மனிதன் கடவுளிடமிருந்து அந்தப் பெட்டியை வாங்கி திறந்தவன் அதிர்ச்சிக்குள்ளாகிறான்........ 
காலி பெட்டியைக் கண்டு..........

கண்ணில் நீர் வழிய கடவுளிடம் "என்னுடையது என்று எதுவும் இல்லையா?" எனக் கேட்க,

கடவுள் சொல்கிறார், "அதுதான் உண்மை. நீ வாழும் ஒவ்வொரு நொடி மட்டுமே உன்னுடையது. வாழ்க்கை என்பது நீ கடக்கும் ஒரு நொடிதான். ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வதுடன் நல்ல செயல்களை மட்டும் செய். எல்லாமே உன்னுடையது என்று நீ நினைக்காதே........"

-- ஒவ்வொரு நொடியும் வாழ்
-- உன்னுடைய வாழ்க்கையை வாழ்
-- மகிழ்ச்சியாக வாழ மறக்காதே.......அது மட்டுமே நிரந்தரம்.......
-- உன் இறுதிக் காலத்தில் நீ எதையும் உன்னுடன் கொண்டு போக முடியாது....

via Ravi swaminathan

"பொய்யில் மறைந்திருக்கும் மெய்!'


"ஒரு கல்லூரியில் நான்கு நண்பர்கள் படித்துக் கொண்டிருந்தார்கள். தாவரவியல் மாணவர்கள். ஒரே ஒரு பரீட்சையைத் தவிர, மற்ற எல்லா பரீட்சையும் எழுதிவிட்டார்கள். மிச்சமிருந்த ஒரு பரீட்சைக்கு இன்னும் ஒரு வார காலம் இருந்தது.
மேலும், அது சுலபமான பேப்பர் என்பதால், இடைப்பட்ட காலத்தில் பக்கத்தில் இருந்த ஒரு மலைவாச ஸ்தலத்துக்கு பிக்னிக் போனார்கள். ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என ஜாலியாக இருந்தார்கள். அவர்கள் கிளம்ப வேண்டிய தருணம் வந்தது.
அப்போது ஒரு நண்பன், "கிளைமேட் அருமையாக இருக்கிறது. இன்றிரவும் இங்கே தங்கிவிட்டு, நாளை காலை ஆறு மணிக்கு காரில் கிளம்பினால் போதும். பரீட்சை நேரத்துக்கு கல்லூரி போய்விடலாம்" என்றான்.
அதுவும் சரிதான் என்று நண்பர்கள் அன்று முழுவதும் அங்கேயே கோலாகலமாக கழித்துவிட்டு, இரவு தாமதமாக தூங்கினார்கள். நெடுநேரம் கழித்தே கண் விழித்தார்கள். 'சரி, பேராசிரியரிடம் ஏதாவது பொய் சொல்லி, மாற்றுப் பரீட்சைக்கு ஏற்பாடு செய்து கொள்ளலாம்' என்ற நம்பிக்கையோடு புறப்பட்டார்கள்.
பேராசிரியர் முன்பு நல்ல பிள்ளைகளைப் போல் நின்றவர்கள், 'சார்.. நாங்கள் அரிதான சில தாவரங்களைச் சேகரிப்பதற்காக ஒரு மலைப்பகுதிக்கு சென்றிருந்தோம். அங்கிருந்து நேராக பரீட்சை எழுத கல்லூரிக்கு வந்துவிடலாம் என்ற திட்டத்தில், விடியற்காலை காரில் புறப்பட்டோம். வழியில் கார் பஞ்சராகிவிட்டது. அதனால் பரீட்சை எழுத முடியவில்லை. நீங்கள் தான் பெரிய மனசு பண்ணி, எங்களுக்கு மாற்றுப் பரீட்சை வைக்க வேண்டும் .." என்று பொய்யை மெய்போல் உருகி சொன்னார்கள்.
பேராசிரியரும் ஒப்புக் கொண்டார். அந்த நான்கு மாணவர்களையும் நான்கு வெவ்வேறு அறைகளில் அமர வைத்து பரீட்சை எழுதச் சொன்னார். மாணவர்களுக்கு செம குஷி. உற்சாகத்துடன் பரீட்சை எழுத உட்காந்தார்கள். முதல் கேள்வி மிகவும் சுலபமாக இருந்தது. மாணவர்கள் அதற்கு விடை எழுதி விட்டு அந்த கேள்விக்கான மதிப்பெண் என்ன என்று பார்த்தார்கள். ஐந்து. சரி என்று அடுத்த பக்கத்தை திருப்பினார்கள். 95 மதிப்பெண்கள் என்ற குறிப்புடன் காணப்பட்ட அந்த கேள்வி, அவர்களின் முகத்தை அறைந்தது. அந்தக் கேள்வி- 'உங்கள் காரில் பஞ்சரானது எந்த டயர்?'

பஞ்சர் என்று பொய் சொன்னார்களே தவிர.. இப்படி ஒரு கேள்வி வரும், அதற்கு இந்த டயர் தான் பஞ்சர் ஆனது என்று நாலு பேரும் ஒன்று போல் பதிலளிக்க வேண்டும் என்று பேசி வைத்துக் கொள்ளவில்லையே!

பொய் என்பது ஒரு தீக்குச்சியைப் போல. அது அந்த கணத்துக்கு மட்டுமே பலன் கொடுக்கும். உண்மை என்பது சூரியனைப் போல.. அது வாழ்நாள் முழுதும் மட்டுமல்ல. வாழ்ந்து முடிந்த பிறகும் கூட பலன் கொடுக்கும்..."

புதன், 14 மே, 2014

மீண்டும் பொழுது புலர்ந்தது.........


இன்னிக்கும் ஆபிஸ் போகணும்.....
இன்றைய செய்தித்தாள் பார்த்து கத்தினேன்........என்னுடைய போட்டோ........ கண்ணீர் அஞ்சலி பக்கத்தில்....
ஓ என்ன விந்தை..........
சிந்தித்துப் பார்த்தேன்......நேற்று இரவு படுக்கைக்குப் போன சிறிது நேரத்தில் பயங்கர நெஞ்சு வலி....பின் அப்படியே தூக்கத்துக்குச் சென்றதுதான் நினைவில் இருக்கிறது........
.
இப்பொழுது விடிந்து விட்டது. மணி 10 AM. ஏன் இன்னும் காபி கொண்டு வரவில்லை. தாமதமாக போனால் இதுதான் சான்ஸ் என்று பாஸ் கடித்துக் குதறுவார்.
"எல்லாம் எங்க போனீங்க?" கத்தினேன்.
என்னுடைய அறைக்கு வெளியில் கூட்டமாக இருப்பது போல் ஒரு சலனம். போய்ப் பார்க்கலாம் என்று எனக்குள் சொல்லிக் கொண்டேன்.
"ஐயோ என்ன இது????? தரையில் நான் கிடத்தப் பட்டிருக்கிறேன்.
"நான் இங்கதான் இருக்கேன்....." நான் கத்தினாலும் யாரும் அதை கவனிக்கவில்லை.
"நான் இன்னும் சாகவில்லை...." மீண்டும் கத்தினேன். ஆனால் யாரும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
நான் மீண்டும் என் படுக்கை அறைக்குச் சென்றேன்.
எனக்குள் கேள்வி - "நான் இறந்து விட்டேனா?"
எங்கே எனது மனைவி, குழந்தைகள், அப்பா அம்மா, நண்பர்கள்?
பக்கத்து அறையில் அனைவரும் அழுது கொண்டிருந்தனர்...... ஒருவருக்கு ஒருத்தர் ஆறுதல் கூறிக் கொண்டே.....
எனது மனைவியும் அழுது கொண்டிருந்தாள்......மிகவும் சோகமாக காணப்பட்டாள்........
எனது சின்ன குழந்தைக்கு எதுவும் புரியா விட்டாலும் அதுவும் அம்மாவின் சோகத்தைக் கண்டு அழுது கொண்டிருந்தது.
எப்படி நான் இறக்க முடியும் என் குழந்தைகளிடம் சொல்லிக் கொள்ளாமல்...... அதுவும் அவர்களுக்கு நான் இல்லாமல் எதுவும் முடியாது......என் மனைவியைப் போல் ஒரு caring wife இந்த உலகத்தில் கிடையாது....ஐயோ என் அப்பா அம்மாவிடமும் சொல்லவில்லையே.......என்னுடைய நண்பர்கள் என் கூட இல்லாத பட்சத்தில் நான் என் வாழ்க்கையில் பல தவறுகளைச் செய்திருப்பேனே......... எனக்கு தேவைப்படும் சமயத்தில் எல்லாம் என் கூட இருந்த நண்பர்களுக்கு நன்றி கூட சொல்லவில்லையே......அதே சமயத்தில் அவர்களுக்குத் தேவைப்படும் சமயத்தில் நான் அவர்கள் கூட இருக்கவில்லையே......கடவுளே......
யார் அந்த மூளையில் நின்று அழுது கொண்டிருப்பது.......ஓ என்னுடைய பழைய நண்பன்..........ஒரு சின்ன மன வருத்தத்தில் எங்களுடைய ஈகோவே எங்களைப் பிரித்தது..........
நான் அவன் அருகில் சென்றேன்........"நண்பா என்னை மன்னித்துவிடு.......இதுவரை நடந்த அனைத்தையும் மறந்து விடு......இன்னும் நீ என்னுடைய best friend"
ஆனால் அவனிடமிருந்து எந்த வித பதிலும் இல்லை.....ச்சே இவ்வளவு சொல்லியும் இன்னும் அவன் ஈகோவை விடவில்லையே........ஓ அவனால் என்னைக் காண முடியவில்லையோ..........
“உண்மையிலேயே இறந்து விட்டேனோ”.........
நான் எனக்கு அருகில் சென்று அமர்ந்தேன்........ கதறினேன்…….
"ஓ கடவுளே...........எனக்கு இன்னும் சிறிது காலம் கொடு. என் மனைவி, குழந்தைகள், பெற்றோர், நண்பர்கள் அனைவரையும் எவ்வளவு நேசிக்க முடியுமோ அவ்வளவு நேசித்து விட்டு வருகிறேன்."
என்னால் தாங்க முடியாமல் கதறினேன்.
"கடவுளே இன்னும் ஒரு வாய்ப்பைக் கொடு" கத்தினேன்.
"என்னப்பா தூக்கத்துல கத்தறீங்க? ஏதாவது கெட்ட கனவு கண்டீங்களா? " என் மனைவி என்னை மெதுவாக எழுப்பினாள்.
ஆ கடவுளே........இது கனவா? நான் இவ்வளவு நேரம் தூக்கத்தில் இருந்தேனா?
என் மனைவி என்னுடன் இருக்கிறாள். என் குரலைக் கேட்கிறாள். இதுதான் என் வாழ்க்கையின் சந்தோஷமான தருணம்.
"கடவுளே இரண்டாவது வாய்ப்பைக் கொடுத்ததற்கு நன்றி.........."
நண்பர்களே.....இன்னும் உங்களுக்கு வாய்ப்பு இருக்கிறது....... உங்களது ஈகோவை விடுங்கள். அனைவரிடமும் அன்பு செலுத்துங்கள். எப்பொழுதும் மகிழ்ச்சியாய் இருங்கள்.

வாழ்க்கை - பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட காலம்......... அதை சந்தோஷமாக வாழுங்கள்......யாருக்கும் தீங்கு செய்யாமல்.......
"எல்லாரும் இன்புற்று இருப்பதுவேயல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே............."

செவ்வாய், 13 மே, 2014

கதை - ஆங்கிலமும் பாதணியும் !!


ஒருவன் ஒரு அழகான ஊரில் குடும்பத்துடன் ஆனந்தமாக வாழ்ந்து வந்தான். அந்த ஊரெங்கும் பசும்புல் தரைகள் நிறைந்திருந்தன. நதியில் தாழம் புதர்களின் வழியே நதி நீர் வழிந்தோடியது.

எந்த ஊருக்கு ஒரு நாடோடி வந்தான். அவன் காலில் தோலினால் செய்யப்பட ஒரு அழகான பாதணி அணிந்திருந்தான்.

அதைப் பார்த்ததும் இவனுக்கு அப்படி ஒரு பாதணி இருந்தால் எப்படி இருக்கும் என ஆசை வந்தது. புதியவனுக்கு தன்னுடைய ஒரு வருட விளைச்சலை கொடுத்து அவனிடம் இருந்து பாதணிகளை வாங்கிக் கொண்டான்.
சில நாட்கள் சென்றன. தன்னுடைய பாதணியை விட்டு அவன் பிரியவே இல்லை. ஆனால் விளைச்சலை முழுவதுமாக அவனிடம் கொடுத்து விட்டதால் அவன் குடும்பம் பசியில் வாடியது. இருந்தாலும் அவன் தன்னுடைய பாதணிகளை அழகு பார்த்துக் கொண்டிருந்தான்.

அவனுக்கு வயலில் நடப்பது இப்போது எளிதாக இருந்தது. முட்கள் குத்தும் பிரச்சினை இல்லாமல் இருந்தது. அவனுக்கு இந்தப் பாதணி இல்லாமல் தான் இவ்வளவு நாள் எப்படி இருந்தோம் என எண்ணி எண்ணி வருத்தப்பட்டான்.தூங்கும் போதும் அவன் பாதணியுடனேயே தூங்கினான்.
ஆனால் அவனுக்கு ஒரு பிரச்சினை வந்தது. தூங்கும் போது அவனுடைய பாதணிகள் அவனுடைய காலில் இருந்து நழுவி விழுந்தன. அது அவனுக்கு பிடிக்கவில்லை. அப்போது அந்த ஊருக்கு திரும்ப அதே நாடோடி வந்தான். நாடோடியிடம் என்னுடைய பிரச்சினையை அவன் சொன்னான்.
நாடோடி ஒரு யோசனை சொன்னான். அதன்படி அவன் தன்னுடைய வயல், தோப்பு அனைத்தையும் அந்த நாடோடிக்கு எழுதிக் கொடுத்து விட்டு அந்த நாடோடியிடம் இருந்து நூறு பாதணிகளை வாங்கினான். அந்தப் பாதணிகளை அவன் படுக்கை முழுவதும் பரப்பி அதன் மீதி உறங்கினான்.

சில ஆண்டுகளில் அவன் குடும்பம் வறுமையில் வீழ்ந்து அழிந்தது. அவனும் அவனுடைய படுக்கையில் பாதணிகளுக்கு நடுவே பசியில் இரண்டு கிடந்தான். ஆனால் சாகும் போது கூட தன்னுடைய அழிவிற்கு இந்த பாதணி தான் காரணம் என்பதை அவன் ஏற்றுக் கொள்ளவில்லை.
நண்பர்களே நம்முடைய ஆங்கில மோகமும் அவனுடைய பாதணி மோகமும் ஒன்று தான். தொடர்பு மொழியாக கற்க வேண்டிய ஒரு மொழியை நாம் வாழ்க்கையின் ஒரே வழியாக ஏற்றோம். இன்று நம்முடைய நிலங்கள், கலைகள், வரலாறு , நதிகள் , வாழ்க்கை முறை, பண்பாடு அனைத்தையும் இழந்து நிற்கிறோம். இருந்தும் நம்முடைய வீழ்ச்சிக்கு உண்மையான காரணம் என்ன என்பதை தெரிந்து கொள்ள மறுக்கிறோம்.

நாம் மீள நம்முடைய மொழியின் மீட்சி அவசியம் என்பதை இன்னும் புரிந்து கொள்ள மறுக்கிறோம். வேலைவாய்ப்பு, உலகமயமாக்கல் என நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோம். எப்படி தாய்மொழியில் கல்வி கற்கும் நாடுகள் சிறந்து விளங்குகின்றன என்பது கண்ணுக்கு முன்னே தெரிந்தும் நாம் நம் தாய் மொழியைப் பழிக்கின்றோம்.

 தமிழர்கள் வாழ்வதும் வீழ்வதும் தமிழின் கைகளில் இருக்கிறதே அன்றி வேறு எதனின் கையிலும் இல்லை.

முட்டாளையும் படிப்பாளியாக்க முடியும். ஆனால் அறிவாளியாக்க முடியாது.


ஒரு மகாராஜாவின் மகன் மிகவும் மக்காக இருந்தான். அதிகாரம் உள்ள பல குடும்பங்களில் இந்த “மக்கு மகன்” பிரச்சனை எப்போதும் உண்டு. அவனுக்கு ஆட்சியை கொடுக்க மக்கள் விரும்பவில்லை. மூத்தவர் சபை எதிர்த்தது. “என்ன செய்யலாம்” என்று அரசர் கவலைப்பட்டார்.

வெளிநாட்டில் திறமையான கலாசாலையில் மகனைச் சேர்த்துவிட்டால் அவர்கள் எப்படியும் அறிவாளி ஆக்கிவிடுவார்கள் என்று மகாராஜா முடிவு செய்தார். அங்கு பலதுறைகள் இருந்தன. உயர்தரமான அந்தக் கலாசாலையில் ஐந்து ஆண்டுகள் தங்கிப் படித்துவிட்டு இளவரசன் திரும்பி வந்தான்.
அவனது உடை, நடை, பாவனைகள் என எல்லாம் மாறியிருந்தன. பளிச்சென்று உடையணியப் பழகியிருந்தான். அழகாக நடப்பது, கைகுலுக்குவது, மரியாதையாய்ப் பேசுவது என்று நிறைய மாற்றங்கள்.
மகாராஜாவுக்கு ஆனந்தம் தாங்கவில்வைல. முதியோர் சபையில் மகனை நிறுத்தி அவர்கள் அனுமதியுடன் அறியாவளியாக்கப்பட்ட மகனை அரசனாக்க நினைத்தார். பலரும் அவனை அறிவாளி என்றே ஒப்புக் கொண்டனர். பல்கலைக் கழகத்தின் சாதனையைய் பாராட்டினர்.


ஒரு வயதானவர் மட்டும் இளவரசனைச் சோதிக்க நினைத்தார். “என்ன படித்தாய்?” என்றார். “நிறைய, நிறைய… சோதிடம் கூட முறையாக கற்றுத் தந்தார்கள். நீங்கள் சோதிடத்தில் கேள்வி கேட்டால் கூடச் சொல்வேன்” என்றான். வயதானவர் தமது மோதிரத்தை உள்ளங்கையில் வைத்து மூடிக் கொண்டு, “இது என்ன?” என்றார். இளவரசன் யோசித்தான்.


ஒரு காகிதத்தை எடுத்து கணக்குப் போட்டான். “உங்கள் கையில் உள்ளது வட்டமானது. நடுவில் ஓட்டையானது. ஒளியுடையது” என்று விடை சொன்னான். வயதானவருக்கு உள்ளூர சந்தோஷம். இருந்தாலும், “அடையாளங்களைச் சொல்கிறாயே ஒழிய அது இன்னதென்று சொல்லக்கூடாதா?” என்றார். “அது எங்கள் பாடத்திட்டத்தில் இல்லை” என்றார் இளவரசன். “யூகித்துச் சொல்” என்றார் வயதானவர்.


உடனே இளவரசன் “பாடத் திட்டத்தில் இல்லையென்றாலும் என் பொது அறிவை வைத்துச் சொல்லி விடுவேன்.. அது ஒரு வண்டிச் சக்கரம்” என்றான்.
முட்டாள். சர்வகலாசாலை சொல்லிக் கொடுத்ததைச் சரியாகச் சொல்லிவிட்டான். ஆனால் வண்டிச்சக்கரத்தை எவரும் உள்ளங்கையில் ஒளித்து வைக்க முடியாது என்ற சின்ன விஷயம்கூட அந்த மடையனுக்குத் தெரிந்திருக்கவில்லை.


முட்டாளையும் படிப்பாளியாக்க முடியும். ஆனால் அறிவாளியாக்க முடியாது.
“You can educate fools; but you cannot make them wishes”.


# நம்மூர் பழமொழி – ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது !!!