இன்னிக்கும் ஆபிஸ் போகணும்.....
இன்றைய செய்தித்தாள் பார்த்து கத்தினேன்........என்னுடைய போட்டோ........ கண்ணீர் அஞ்சலி பக்கத்தில்....
ஓ என்ன விந்தை..........
சிந்தித்துப் பார்த்தேன்......நேற்று இரவு படுக்கைக்குப் போன சிறிது நேரத்தில் பயங்கர நெஞ்சு வலி....பின் அப்படியே தூக்கத்துக்குச் சென்றதுதான் நினைவில் இருக்கிறது........
.
இப்பொழுது விடிந்து விட்டது. மணி 10 AM. ஏன் இன்னும் காபி கொண்டு வரவில்லை. தாமதமாக போனால் இதுதான் சான்ஸ் என்று பாஸ் கடித்துக் குதறுவார்.
"எல்லாம் எங்க போனீங்க?" கத்தினேன்.
என்னுடைய அறைக்கு வெளியில் கூட்டமாக இருப்பது போல் ஒரு சலனம். போய்ப் பார்க்கலாம் என்று எனக்குள் சொல்லிக் கொண்டேன்.
"ஐயோ என்ன இது????? தரையில் நான் கிடத்தப் பட்டிருக்கிறேன்.
"நான் இங்கதான் இருக்கேன்....." நான் கத்தினாலும் யாரும் அதை கவனிக்கவில்லை.
"நான் இன்னும் சாகவில்லை...." மீண்டும் கத்தினேன். ஆனால் யாரும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
நான் மீண்டும் என் படுக்கை அறைக்குச் சென்றேன்.
எனக்குள் கேள்வி - "நான் இறந்து விட்டேனா?"
எங்கே எனது மனைவி, குழந்தைகள், அப்பா அம்மா, நண்பர்கள்?
பக்கத்து அறையில் அனைவரும் அழுது கொண்டிருந்தனர்...... ஒருவருக்கு ஒருத்தர் ஆறுதல் கூறிக் கொண்டே.....
எனது மனைவியும் அழுது கொண்டிருந்தாள்......மிகவும் சோகமாக காணப்பட்டாள்........
எனது சின்ன குழந்தைக்கு எதுவும் புரியா விட்டாலும் அதுவும் அம்மாவின் சோகத்தைக் கண்டு அழுது கொண்டிருந்தது.
எப்படி நான் இறக்க முடியும் என் குழந்தைகளிடம் சொல்லிக் கொள்ளாமல்...... அதுவும் அவர்களுக்கு நான் இல்லாமல் எதுவும் முடியாது......என் மனைவியைப் போல் ஒரு caring wife இந்த உலகத்தில் கிடையாது....ஐயோ என் அப்பா அம்மாவிடமும் சொல்லவில்லையே.......என்னுடைய நண்பர்கள் என் கூட இல்லாத பட்சத்தில் நான் என் வாழ்க்கையில் பல தவறுகளைச் செய்திருப்பேனே......... எனக்கு தேவைப்படும் சமயத்தில் எல்லாம் என் கூட இருந்த நண்பர்களுக்கு நன்றி கூட சொல்லவில்லையே......அதே சமயத்தில் அவர்களுக்குத் தேவைப்படும் சமயத்தில் நான் அவர்கள் கூட இருக்கவில்லையே......கடவுளே......
யார் அந்த மூளையில் நின்று அழுது கொண்டிருப்பது.......ஓ என்னுடைய பழைய நண்பன்..........ஒரு சின்ன மன வருத்தத்தில் எங்களுடைய ஈகோவே எங்களைப் பிரித்தது..........
நான் அவன் அருகில் சென்றேன்........"நண்பா என்னை மன்னித்துவிடு.......இதுவரை நடந்த அனைத்தையும் மறந்து விடு......இன்னும் நீ என்னுடைய best friend"
ஆனால் அவனிடமிருந்து எந்த வித பதிலும் இல்லை.....ச்சே இவ்வளவு சொல்லியும் இன்னும் அவன் ஈகோவை விடவில்லையே........ஓ அவனால் என்னைக் காண முடியவில்லையோ..........
“உண்மையிலேயே இறந்து விட்டேனோ”.........
நான் எனக்கு அருகில் சென்று அமர்ந்தேன்........ கதறினேன்…….
"ஓ கடவுளே...........எனக்கு இன்னும் சிறிது காலம் கொடு. என் மனைவி, குழந்தைகள், பெற்றோர், நண்பர்கள் அனைவரையும் எவ்வளவு நேசிக்க முடியுமோ அவ்வளவு நேசித்து விட்டு வருகிறேன்."
என்னால் தாங்க முடியாமல் கதறினேன்.
"கடவுளே இன்னும் ஒரு வாய்ப்பைக் கொடு" கத்தினேன்.
"என்னப்பா தூக்கத்துல கத்தறீங்க? ஏதாவது கெட்ட கனவு கண்டீங்களா? " என் மனைவி என்னை மெதுவாக எழுப்பினாள்.
ஆ கடவுளே........இது கனவா? நான் இவ்வளவு நேரம் தூக்கத்தில் இருந்தேனா?
என் மனைவி என்னுடன் இருக்கிறாள். என் குரலைக் கேட்கிறாள். இதுதான் என் வாழ்க்கையின் சந்தோஷமான தருணம்.
"கடவுளே இரண்டாவது வாய்ப்பைக் கொடுத்ததற்கு நன்றி.........."
நண்பர்களே.....இன்னும் உங்களுக்கு வாய்ப்பு இருக்கிறது....... உங்களது ஈகோவை விடுங்கள். அனைவரிடமும் அன்பு செலுத்துங்கள். எப்பொழுதும் மகிழ்ச்சியாய் இருங்கள்.
வாழ்க்கை - பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட காலம்......... அதை சந்தோஷமாக வாழுங்கள்......யாருக்கும் தீங்கு செய்யாமல்.......
"எல்லாரும் இன்புற்று இருப்பதுவேயல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே............."
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக