செவ்வாய், 22 ஏப்ரல், 2014

சிவ வழிபாடு


ஆதி காலத்தில் உலகின் பல பகுதிகளில் சிவலிங்க வழிபாடு இருந்து உள்ளது.
** வட அமெரிக்காவில் கொலராடோ என்னும் இடத்தில் ஒரு குன்றின் மீது சிவன் கோவிலும், அதில் பெரிய சிவலிங்கமும் கடந்த 1937-ல் கண்டுபிடிக்கப்பட்டது.
அதை ஆய்வு செய்த போது 1000- ஆண்டு முற்பட்டது என தெரிய வந்ததது.


** தென் கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான ஜாவா தீவில் பல சிவன் கோவில் காண முடிகிறது.
அங்கு உள்ள டெக்கால் என்ற ஆற்றில் இருந்து சிவபெருமானின் செப்பு சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டு இருக்கிறது. 


** ஜாவா தீவில் உள்ள கோவில்களில் இன்றும் திருவாசகம் ஓதுகிறார்கள். தமிழ் மொழி தெரியாது என்பதால் மந்திரம் போல் அதை உச்சரிக்கிறார்கள். 


** ஜாவா தீவுக்கு அருகே உள்ள சுமத்திரா தீவிலும் சிவன் கோவில் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது.
அங்கே அர்த்த நாரீஸ்வரர் வடிவில் சிவன் காட்சி தருகிறார். மேலும் விநாயகர், நந்தி சிலைகளும் அங்கு உள்ளது. 


** போர்னியா என்ற இடத்தில் ஒரு மலைக் குகையில் சிவன் சிலையுடன் விநாயகர் சிலையும் கண்டு பிடிக்கப்படுளது. 


** சியாம் நாட்டில் பழமையன சிவன் கோவிலை இன்றும் காண முடிகிறது. இப்போதும் பொங்கல் விழா கொண்டாடுகிறர்கள். 


** பாபிலோனியாவில் 6000-ம் ஆண்டு முற்பட சிவன் கோவில்களும் சிவ வழிபாடு நடந்ததற்கான ஆதாரங்களும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இங்கு கண்டெடுக்கப்பட்ட களிமண் ஏட்டில் `சிவன்' என்ற பெயர் காணப்பட்டது.
பாபிலோனியர் தங்களது கடவுள்களில் ஒரு கடவுளை அழைக்கும் பெயர் `எல்சடை' என்பதாகும். இதற்கு `சிவந்த சடை உடையவன்' என்று பொருள்.
இங்கு கிடைத்த சிவபெருமான் சிலை காளை மீது நிற்பதாக உள்ளது. 


** சிரியா நாட்டில் சிவன் சிலையும், அவரது உருவம் பொறித்த வெண்கல தட்டும் கிடைத்துள்ளது. 


** க்ரேக்க நாட்டில் சிவ லிங்கங்களை பொது இடங்களில் நீராட்டி வழிபட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்து உள்ளன. 


**சர்வம் சிவமயம்** 


ஆதி சைவம்.
தெருவுக்குத் தெரு நடுச்சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக கோயில்களைக் கட்டி அலப்பறை செய்வது யார்?

இது அதிபுத்திசாலிதனமான கேள்வி. கோயில்களை சுற்றி ரோடு போட்டு கோயில் சொத்தை திருடி கொண்டு பிறகு அந்த கோயிலையே தெருவோர கோயில் என்று மாற்றுவிடுகிறார்கள்.

இதற்கு ஒரு சிறந்த உதாரணம் கிண்டி இரயில் நிலையத்தின் முன் புறம் உள்ள சிவன் கோயில்.

அந்த இடமே ஒரு காலத்தில் அதாவது சுதந்திரத்திற்கு முன்பு அந்த கோயிலுக்கு சொந்தமாக இருந்தது. இப்பொழுது அது தெருவோர கோயிலாக மாறி போகிறது.

பல ஆயிரக்கணக்கான கிராமங்களையும் கோயில்களையும் விழுங்கிதான் இந்த அசுர நகர வளர்ச்சி ஏற்படுகிறது.

இதற்கு ஆயிரகணக்கான உதாரணங்கள் தர முடியும். இப்படி அரைகுறையாக ஏதாவது உளறி கொட்ட வேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன்.

நிலைமை இப்படி இருக்க…. இடத்தை கொடுத்தால் மடத்தை பிடித்த கதையாக கோயில் நிலங்களை ஆக்கிரமித்து அதற்கு சொந்தமான வளங்களை ஜீரணித்து கடைசியில் அந்த கோயிலையே தெருவோர கோயில் என்று சொல்கிறார்கள்.. ஹ்ம்ம்..

வாத்தியார்

எங்க தெருவுல இருக்குற ஒரு பையனைக் கூப்பிட்டு,
"திருக்குறளை எழுதியவர் யார்?"ன்னு கேட்டேன்.
உடனே அவன்,
"எங்கப்பா சார்" அப்படின்னான்.
நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்.
"என்னட‌ உளர்றே, யாருடா உங்க அப்பா"ன்னு கேட்டேன்.
அவன் சொன்னான்,
"தமிழ்நாடு அரசு போக்குவரத்துல பெயிண்டரா இருக்கார் சார்"

***================================================== ***

ஆசிரியர் : "உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு"?

மாணவன் : "விடுங்க டீச்சர்! ஊர சுத்துன வெட்டிப் பயல பத்தி என்ன பேச்சு வேண்டி கிடக்கு"?

ஆசிரியர் : ?!?!

***==================================================***


நம்ம சேனல்ல, தமிழ் வாத்தியாரை கூப்பிட்டு வந்து,
சமையல் நிகழ்ச்சி நடத்தினது தப்பாப் போச்சு…!
ஏன், என்னாச்சு?

சப்பாத்தி எப்படி செய்யறதுன்னு கேட்டா ‘ச’ போட்டுப்
‘ப்’ போட்டு ‘பா’ போட்டு, ‘த்’ போட்டு, ‘தி’ போட்டா,
சப்பாத்தி வந்திடுங்கிறாரு…!

ராமன் நடந்த படி நடக்க வேண்டும், கண்ணன் சொன்னபடி கேட்க வேண்டும்!!

ராமன் நடந்த படி நடக்க வேண்டும், கண்ணன் சொன்னபடி கேட்க வேண்டும்!!
ராமன் ஒழுக்க சீலன். ஏகபத்தினி விரதன். பெரியோர்களை மதித்து போற்றுபவன்.
தந்தை சொல்லை தாரக மந்திரமாக ஏற்று கானகம் சென்றவன்.வசிட்டர், விசுவாமித்திரர், பரத்வாஜர், அகத்தியர் போன்ற முனிவர்களின் ஆலோசனையின் படி கேட்டு நடந்தவன் என்பது ராமாயாணம் படிக்கும் போது தெரியவருகிறது.
குகனை தன் தம்பியரில் ஒருவனாக என்றுக் கொண்டதில் இருந்தும், அனுமனை தந்தையின் ஸ்தானத்தில் வைத்து போற்றியதில் இருந்தும், ராமன் அனைவரையும் வேறுபாடின்றி மதித்து அன்பு செலுத்துபவன் என்று அறிய முடிகிறது.
இத்தகைய குணங்களினால்தான் இப்பூமியிலே அனைத்து குணநலன்களிலும் சிறந்தவனாக யாரும் இருக்கிறார்களா என்று வால்மீகி கேட்கும் போது நாரதர், அப்படி பட்ட ஒருவர் அயோத்தியை அரசாலும் ஸ்ரீராமர் என்று கூறினார்.
இப்படிப்பட்ட ராமனை போல் உயர் குணங்களுடன் ஒருவன் திகழ வேண்டும் என்பதை சொல்லத்தான் ராமன் நடந்தபடி நடக்க வேண்டும் என்று ஆன்றோர் சொல்லி வைத்துள்ளனர்.
அதே போல் மகாபாரதத்தில் கண்ணன் ஆலோசனை சொல்வதில் தந்திரசாலியாக திகழ்கிறான்.
கண்ணனின் ஆலோசனைப்படியே குந்தி கர்ணனிடம் வரம் கேட்கிறாள். அது பாண்டவர்களுக்கு சாதகமாக அமைந்தது.
பாண்டவர்கள் கண்ணனின் ஆலோசனைப்படியே செயல்படுகின்றனர். குருசோத்திர போரிலும் தன் உறவினர்களை பார்த்து தயங்கி நின்ற அர்ச்சுனனுக்கு, அவனுடைய கடமையை பற்றி உபதேசம் செய்கிறான்.
அர்ச்சுனனின் சந்தேகங்களை போக்குகிறான். பீஷ்மரை வெல்வதற்கும், துரோணரை மாய்ப்பதற்கும், கர்ணனை சாய்ப்பதற்கும் கண்ணின் ஆலோசனையே உதவி புரிந்தன.
மகாபாரத போரில் பாண்டவர்களின் வெற்றிக்கு அவர்கள் கண்ணனின் சொல்படி நடந்ததே காரணம். எனவே தான் கண்ணன் சொன்னபடி கேட்க வேண்டும் என்று கூறும் வழக்கம் வந்தது.

புதன், 16 ஏப்ரல், 2014

அண்ணாமலைக்கு அரோகரா

முக்தி (பிறப்பற்ற நிலை) அருளும் தலங்கள் நான்கு. திருவாரூரில் பிறக்க முக்தி; காசியில் இறக்க முக்தி; தில்லைச் சிதம்பரத்தில் தரிசிக்க முக்தி;

ஆனால், எவர் ஒருவரும் நினைத்த அளவிலேயே முக்தி அருளும் தலமாக இருப்பது
திருவண்ணாமலை.

பஞ்சபூதத்தலங்களில் அக்னித்தலமாக விளங்குகிறது.

இத்தலத்தில், "அண்ணாமலைக்கு அரோகரா' எனச் சொல்லி சிவபெருமானை வணங்குவர்.

இதன் பொருள் என்ன தெரியுமா? எல்லாம் வல்ல சிவனின் திருநாமங்களில் "அரன்'
என்பதும் ஒன்றாகும்.

இத்திருப்பெயரினை "அரன், அரன்' என அடுக்குத்தொடர்போல
சொன்னார்கள் ஒரு காலத்தில்! அது "அர ஹர அர ஹர'' என்று மாறியது. பின்னர்
"அரோஹரா' எனத் திரிந்தது.

"அரஹர' என்றால் "சிவனே சிவனே' என சிவபெருமானை கூவி அழைப்பதற்கு ஒப்பாகும்.


அதிகம் ஆசைப்பட்டால்....


ஒரு ஊரில் ஒரு கிழவரும், கிழவியும் இருந்தனர்... கிழவர் எது செய்தாலும், கிழவிக்கு பிடிக்காது. இருவருக்கும் அடிக்கடி சண்டை வரும். ஒரு நாள் ஆற்றங்கரைக்கு சென்றார் கிழவர். அங்கே காலில் அடிபட்டு, நடக்க முடியாமல் இருந்தது ஒரு குருவி.
பரிதாபப்பட்டு அதை வீட்டுக்கு எடுத்து வந்து, ஒரு கூண்டு வாங்கி, அதனுள் வைத்தார் கிழவர். இதை கண்ட கிழவிக்கு கோபம்... "இந்த நொண்டி குருவியை, இங்கு எதற்குக் கொண்டு வந்தாய்?' என்று ஆத்திரப்பட்டு, அந்த குருவியை கூண்டிலிருந்து எடுத்து வீசி எறிந்தாள்.
பறந்து சென்ற குருவி, பழையபடி ஆற்றங்கரை மரத்தின் மேல் உட்கார்ந்து கொண்டது.
மறுநாள், ஆற்றங்கரைக்குப் போனார் கிழவர்... அப்போது, "பெரியவரே... நீங்கள் செய்த உதவிக்கு நன்றி. அதோ பாரும்... அங்கே மூன்று பானைகள் மூடி போட்டு வைக்கப்பட்டிருக்கின்றன. அதில், ஒரு பானையை எடுத்துக் கொண்டு, வீட்டுக்குப் போய் திறந்து பாரும்...' என்றது குருவி.
கிழவரும், மூன்று பானைகளில் ஒன்றுடன் வீட்டுக்குப் போய் திறந்து பார்த்தார்... ஒரே ஆச்சரியம்... பானை நிறைய தங்க காசுகள் இருந்ததைப் பார்த்து சந்தோஷப்பட்டார். "இனி செலவுக்கு கஷ்டமில்லை...' என்று எண்ணினார்.
அப்போது அங்கே வந்தாள் கிழவி... "ஏது, இந்த பானை நிறைய தங்க காசு?' என்று கேட்டாள். கிழவரும், தான் ஆற்றங்கரை
பக்கம் போனதையும், அந்த நொண்டிக் குருவி, இந்த பானையை காண்பித்ததையும் விவரமாகச் சொன்னார்.
அதைக் கேட்ட கிழவி, "ஓ... அந்த நொண்டிக் குருவியா! சரி... நானும் போய் அந்த குருவியைப் பார்த்துவிட்டு, இதைவிட பெரிய பானையை கொண்டு வருகிறேன் பார்...' என்று சொல்லி, ஆற்றங்கரைக்குப் போனாள்.
அங்கே அந்த குருவி இருந்ததைப் பார்த்தாள். கிழவியை பார்த்து, "எங்கே இந்தப் பக்கம் வந்தாய்?' என்று கேட்டது குருவி. "சும்மா தான் உன்னை பார்த்து விட்டுப் போகலாமென்று வந்தேன். உன்னை அனாவசியமாக நான் வீசியெறிந்து விட்டேன். என்னை மன்னித்து விடு.
என் புருஷனுக்கு ஒரு பானையை காண்பித்தது போல், எனக்கும் ஒரு பானையை காண்பிக்க வேண்டும்...' என்று வேண்டினாள் கிழவி.
குருவியும், "கவலைப்படாதே... அதோ இருக்கும் மூன்று பானைகளில், ஒன்றை எடுத்துக் கொண்டு, வீட்டுக்குப் போய் திறந்து பார்...' என்றது. கிழவியும், மூன்று பானைகளில் பெரிதாக இருந்த ஒரு பானையுடன், அவசர அவசரமாக வீட்டுக்குப் போய் பானையை திறந்தாள்.
அவ்வளவுதான்... பானையிலிருந்து தேளும், நட்டுவாக்கலியும் குதித்து ஓடியது கண்டு, ஓவென்று அலறி ஓடினாள்.
அதிக ஆசைப்படக் கூடாது; பொறாமை கொண்டு எதையும் செய்யக்கூடாது. தனக்கு எது கிடைக்குமோ அதைத்தான் அடைய வேண்டும். "அவனுக்குக் கிடைத்ததே... அதே போல் எனக்கும் கிடைக்க வேண்டும்...' என்று நினைக்கக் கூடாது.
எண்ணம் போல்தான் எதுவும் கிடைக்கும்; வீண் ஆசை கூடாது.

வியாழன், 10 ஏப்ரல், 2014

சித்தர்கள்

மலையுச்சி என்பதுன் தலையுச்சி தானப்பா !! சித்தர்.

ஒன்றில் இருந்து மற்றொன்றில் இல்லாமல் போனால் அதை எப்படி பூரணம் என்று சொல்ல முடியும் ? பரம் பொருள் எல்லாவற்றிலும் நீக்கமற நிரம்பியிருக்கிறார் என்பது உண்மையானால், அவர் கல்லிலும் இருப்பார், புல்லிலுமிருப்பார். பிறகு ஏன் அவர் நட்ட கல்லில் இல்லை என்று சொல்கிறார்கள் ? கறியைத் தன்னகத்து கொண்டிருக்கின்ற சட்டிக்கு அதன் சுவை தெரியுமா ? அது போல கல்லுக்கு தனக்குள் இருக்கும் பரமனைத் தெரியாது. அப்படியானால், அதைத் தெரிந்து கொள்வது எது ? என்றால், அது மனிதனின் அறிவு மட்டுமே. உலகில் வேறு எதுவும் தான் பரமனின் அம்சம் என்பதை உணராது. எனவே இத்தகைய மகத்துவம் பொருந்திய மனத்தை உடைய மனிதன் தன்னுள்ளும் பரமன் இருக்கிறான் என்று உணராமல் வீணே புற விஷயங்களில் தன் மனதை உழலச் செய்து தனது சக்திகள் அனைத்தையும் விரையம் செய்கிறானே, என்ற ஆதங்கத்தில் அப்படிச் சொன்னார்களே தவிர அவர்களுக்கும் தெரியும் கல்லுக்குள்ளும் கடவுள் இருக்கிறார் என்று. நெறியைப் பற்றிக் கொண்டே இருக்காதே, குறியை நோக்கி முன்னேறு என்பது கோட்பாடு. ஏறிய பின் ஏணியை அங்கேயே விட்டு விட வேண்டும். பின்னால் வருபவர்கள் ஏறுவார்கள். அதைத் தூக்கி நம் தலையில் வைத்துக் கொண்டு அலையக் கூடாது என்பதே சொல்ல வரும் கருத்து.
மனதின் மகத்துவத்தை உணர்த்துவதற்காக சில பாடல்கள் அப்படித் தெறித்து விழுகின்றன. நமக்கு ஐம்புலன்கள் இருக்கின்றன. கண் பார்க்கிறது. காது கேட்கிறது. மூக்கு முகர்கின்றது. நாக்கு சுவையை உணர்த்துகிறது. தோலில் தொடு உணர்வு உள்ளது. ஆனால், இவை அனைத்தும் இயங்கினாலும் மனம் என்ற ஒன்று இல்லை என்றால் அந்த உணர்வுகள் நம் அறிவுக்குப் புலப்படுமா ? புலப்படாது.

இவ்வாறு இவை அனைத்தின் மூலமாகவும் உலகை அறிவது மனமே ஆகும். மனம் புலன்கள் மீது தன் கவனத்தை செலுத்தா விட்டால் காதில் ஒலி கேட்டாலும் கேட்காத நிலை ஏற்பட்டு விடுகிறது. கண் பார்த்தாலும் பார்க்காதது போன்ற நிலை ஏற்படுகிறது. எனவே எல்லா இயக்கங்களுக்கும், அவற்றை உணர்வதற்கும் காரணமாக இருப்பது மனமேயாகும். அப்படி நமக்குள் மனமாகவும், பிரபஞ்ச வெளியில் பிரபஞ்ச மனமாகவும் விளங்குவது பரம்பொருளே. தத்துவங்களாக விரிந்த நிலையில் பல்வேறு ஆற்றல்களாகச், சக்திகளாகப் பிரிந்து நின்று இயங்கும், பரம்பொருள் ஒடுக்க நிலையில் அனைத்தையும் தன்னகத்தே ஒடுக்கிய பேராற்றல் களமாகத் திகழ்கிறார். இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், மனம் இயங்குவது விரிவுபட்ட நிலை. மனம் இயங்கவில்லை என்றால் அதுவே ஒடுக்க நிலை. எனவேதான் மனதற்ற நிலையை வேண்டித் தவமியற்றுகிறார்கள். மனதை புற விசயங்களில் ஈடுபடுத்திக் கொண்டேயிருந்தால் அது எண்ணங்களாக விருத்தியாகிக் கொண்டேயிருக்கும். அதை உள்முகமாகச் செலுத்தி, அதன் பிறப்பிடத்தை நோக்கி கொண்டு செல்லும் பொழுது, அதன் விருத்திகள் அனைத்தும் ஒடுங்கி, ஒடுக்க நிலையான பரம்பொருள் நிலையை அடைகின்றது.

எனவே வார்த்தைகளில் தேங்கி நிற்காமல், அதன் உட்பொருளைத் தேடும் பொழுது, ஒருநாளில்லை ஒரு நாள் உண்மைப் பொருள் அறிவில் விளங்க வரும். சிவசக்தி தத்துவ உணர்வே ஞானம். அதைப் பழமாக உருவகப்படுத்தினார்கள். முருகன் தன் ஆற்றலின் மூலம் அடைய நினைக்கிறார். வினாயகர் தன் அறிவின் மூலம் அடைகிறார். இதன் உட்கருத்து வெற்றி, தோல்வியைக் குறிப்பதல்ல. எவர் எவ்வழி சென்றாலும் ஞானத்தின் மூலமாகவே மெய்ப் பொருளை உணரவோ, அடையவோ முடியும் என்பதே. உடனே முருகன் கோவித்துக் கொண்டு, கோவணம் உடுத்தி, தண்டம் கொண்டு மலை உச்சியில் போய் அமர்ந்து கொண்டார் என்பார்கள். கோவணம் உடுத்தி என்பது பற்றுகளைக் களைவதைக் குறிப்பது. ஆறு முகம் என்கிற ஆறு அறிவினையும் அடக்கி தலை உச்சியில் மனதை வைத்து நிலைத்து நிற்பதையே மலை உச்சியாகச் சொன்னார்கள். வேல் கீழே விரிவு பட்ட மனம் மேலே இலக்கை நோக்கி குவிகின்ற நிலையைக் குறிப்பது. தண்டம் என்பது முதுகுத் தண்டாகிய சுழுமுனை நாடியைக் குறிப்பது. ஆறு அறிவால் தான் பெற்ற ஆற்றல்களையெல்லாம் ஒடுக்கி மனதைத் தலை உச்சிக்குக் கொண்டு செல்லும் பொழுது குண்டலினியாகிய சக்தி மேலேறி வருவாள் மெய்ப் பொருளை விளக்கிடுவாள். இதையே சக்தியாகிய உமையவள் வந்து முருகனுக்கு பரம்பொருளின் திருவிளையாடல்களை விளக்கியதாகச் சொல்வார்கள். ஒவ்வொரு புராணங்களுக்குள்ளும் எவ்வளவோ நுட்பங்கள் மறைந்திருக்கின்றன.

உபநிடதங்களாகட்டும், இதிகாசங்களாகட்டும், புராணங்களாகட்டும், சித்தர்கள் பாடல்களாகட்டும், தேவாரம், திருவாசகம், திருப்புகழ், திருக்குறளாகட்டும் இவை அனைத்துமே மனிதன் பரம்பொருளை அடைவதைக் குறித்து சொல்லப்பட்ட நுட்பங்களே தவிர வேறொன்றுமில்லை.

சனி, 5 ஏப்ரல், 2014

ஆள் பார்த்து பேசணும் !


ஒரு அறிஞருக்கு இலக்கண சுத்தமாகப் பேசுபவர்களை மிகவும் பிடிக்கும். மாற்றிப் பேசுபவர்களைக் கண்டால் கோபப்படுவார்.

ஒருநாள் இரவில், அவர் ஒரு கிணற்றுக்குள் விழுந்து விட்டார். உள்ளே தண்ணீர் இல்லை. அடிப்பாகத்தில் மணல் கிடந்ததால், காயமில்லாமல் தப்பி விட்டார். ஆனால், வெளியே வரும் உபாயம் தெரியவில்லை.

""யாராவது என்னைக் காப்பாற்றுங்கள்,'' என்று ஓலக்குரல் இட்டார். இதை அவ்வழியாகச் சென்ற ஒருவன் இதைக் கேட்டான்.

கிணற்றுக்குள் எட்டிப்பார்த்தான். அவனால், அவரை தனியாக மீட்க முடியாதென புரிந்து விட்டது. ""ஐயா! சற்றுப் பொறுங்கள். ஊருக்குள் சென்று உதவிக்கு ஆட்களைக் கூட்டி வருகிறேன். இருளாக வேறு இருக்கிறது. விளக்கிற்கும் ஏற்பாடு செய்கிறேன்,'' என்றான்.


ஆபத்தில் கிடந்தவர், ""நன்றியப்பா! விரைந்து வா,'' என்று சொல்லியிருந்தால் பரவாயில்லை. யாரிடம் என்ன சொல்வது என்று இல்லாமல், ""தம்பி! நீ பேசியதில் இலக்கணப்பிழை இருக்கிறது.


"ஆட்களைக் கூட்டி வருகிறேன்' என்பது நிகழ்காலம். "கூட்டி வருவேன்' என்றால் தான் எதிர்காலம். எதிர்காலத்தில் நடக்கப் போவதை, நிகழ்காலமாக்கி விட்டாயே,'' என்றார்.


""சரி சாமி! முதலில், எப்படி பேச வேண்டும் என இலக்கண வல்லுநர்களிடம் போய் கற்றுக் கொண்டு, அதன் பிறகு ஆட்களை கூட்டி வருகிறேன்,'' என சொல்லிவிட்டு அவன் போய் விட்டான்.


எந்த நேரத்தில் என்ன தேவையோ, அதைத்தான் பேச வேண்டும்.

வியாழன், 3 ஏப்ரல், 2014

சரகர் என்ற மாபெரும் மருத்துவர்......


ஆயுர்வேதத்தில் சரகர் (கி.மு.200) பெயர் பிரபலமானது. சுஸ்ருதர் அறுவைச் சிகிச்சையில் தேர்ந்தவர் என்றால் , சரகர் மருத்துவர். தம் காலத்தில் இருந்த மருத்துவ நிலையை 'சரக சம்ஹிதை' என்ற நூலில் வர்ணித்திருக்கிறார்.

கருப்பையில் சிசுவின் வளர்ச்சி, மனித உடற்கூறுகள், வாதம், பித்தம், கபம், என்ற அடிப்படையில் மனித உடல் இயங்கும் முறை முதலியவற்றையும், நோயைக் கண்டறியும் முறையையும் அதற்க்கான சிகிச்சையையும் விவரமாக தந்திருக்கிறார். வயதானவர்களின் உடல் மீண்டும் புத்துணர்வு பெற வழி வகைகள் கூறியிருக்கிறார். ஒரு நோயாளியை முழுமையாகப் பரிசோதிக்க வேண்டும். நோய் வரக்காரணம் என்ன என்பதையும் நோயாளியின் உடலமைப்பையும், வயது, சக்தி, ஆகியவற்றொடு அவருடைய நிலை, எந்த பருவகாலத்தில் நோய்க்கு ஆளானார் என்பது குறித்தும் விசாரிக்கப்பட வேண்டும்.

மூலிகைகள் மற்றும் காய்கறிகளிலிருந்து தயாரிக்கப்படும் மருந்துகளை சரக சம்ஹிதை பரிந்துரைக்கிறது. சில மிருகக் கொழுப்புகளும், தாதுக்களும் உபயோகப்படுத்தப்பட்டன. மருந்துகள் அவற்றின் செயல்பாட்டை வைத்து, 50 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு அவை கண், காது, தோல், முதலிய பாகங்களில் எவ்வாறு செயல்படுகின்றன என்று தனித்தனியே  பரிசோதிக்கப்பட்டிருக்கின்றன.

பொடி, பசை, சாறு, வடிகட்டியது, புளிக்க வைத்த, நெய், எண்ணெய், நாசியில் வைத்து நுகர்வது, எனிமா என்று இவர் பலவகை மருந்துகளை வர்ணித்திருக்கிறார். அன்றை காலத்து சமூகப் பழக்கவழக்கங்களை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்ட நூல். உணவு, உடை, புகை, மது அருந்தும் பழக்கம் இவை பற்றி இந்நூலில் விவரிக்கப்பட்டுள்ளது.

சரக என்றால் ஓரிடத்தில் தங்கியிராதவர். அவர் பிறந்த இடம் பற்றி எந்த தகவலும் இல்லாததால், சரகர் ஒரு மருத்துவராக, ஒவ்வோர் இடமாகப் போய்க் கொண்டிருந்தார் என்று கொள்ளலாம். அவர் புத்தருக்கு முன் (கி.மு. 400) வாழ்ந்தார் என்று தெரிகிறது.

பிரம்மனின் பரம்பரையில் வந்த மருத்துவர் சரகர். தக்ஷ பிரஜாபதி, அஸ்வினி குமாரர்கள், இந்திரன், பரத்வாஜர், ஆத்ரேயர், அடுத்து வருபவர்கள் சரகரும் அக்னிவேசரும். பரத்வாஜர் இந்திரனை அணுகி, 'நோய்கள் எல்லாம் உயிர்களையும் அச்சுறுத்தி வருகின்றன. இதை எவ்வாறு எதிர்கொள்ளலாம்' (வியாதயா ஹி சமுத்பன்ன: ஸர்வ ப்ராணி பயங்கர: தத் ப்ருஹி மே ஸமோபாயம்) என்று சொல்லுங்கள்! என்கிறார். பரத்வாஜர் இந்த விஞ்ஞானத்தை ஆத்ரேயருக்குக் கற்றுக்கொடுக்க, அவர் அதை சரகர், பராசரர், அக்னிவேசருக்குக் கற்றுக்கொடுத்துள்ளார்.

தேவர்கள் மகிழ்ந்து, தெய்வீக குணங்களான புத்தி, சித்தி, ஸ்ம்ருதி(நினைவாற்றல்), மேதா (ஞானம்), த்ரிதி (பொறுமை) கீர்த்தி, க்ஷமா (பொறுத்துக் கொள்ளுதல்), மற்றும் தயை (கருணை) போன்ற குணநலன்களை எல்லாம் இந்த விஞ்ஞானத்தில் சேர வைத்தனர். இந்த குணங்கள் அர்பணித்தவர்களையும் ஆட்கொண்டது.
 
 
 
 நன்றி :மக்கள் சேவையே மகேசன் சேவை
 


முழுக்க முழுக்க செங்கல்லில் கூட இப்படி ஒரு கட்டிடத்தை கட்ட முடியுமா? அப்பர், சுந்தரர் தேவாரம் பாடும் போது, அவர்கள் காலத்தில் இப்படித்தானே இருந்திருக்கும் அந்த கோயில்கள்!! இத்தனை பெரிய மரம் முளைத்தும் விரிசல் கூட விடாமல் ஒரு செங்கல் கட்டிடம் அதனை இத்தனை அழகாய் தாங்கி தாக்கு பிடிக்கின்றதே என்று பெருமைபட்டுக்கொண்டாலும் சரி, இது போன்ற பொக்கிஷங்களை இன்று செய்ய தான் முடியாது என்றாலும் இருப்பவையேனும் காப்பாற்ற கூட முடியாத பணத்தின் பின் ஓடிக்கொண்டிருக்கும் தலைமுறையினராக இருக்கிறோமே என்று நினைத்து வருத்தப்பாட்டலும் சரி.

அது உங்கள் மனநிலையை பொருத்தது. வெளிநாட்டு நண்பர்கள் யாரேனும் உங்களுக்கு இருந்தால் அவர்களிடம் இந்த படத்தை காட்டுங்கள், எங்கள் மண்ணில் திறமையான மனிதர்கள் வாழ்ந்து மறைந்திருக்கிறார்கள் என்று!

நாங்கள் நட்டு வைத்த மரங்களை காப்பாற்ற படாத பாடு பட்டோம், 100 ல் 90 மட்டும் தான் பிழைத்தது, ஆனால் இது போன்ற இடங்களில் வளரும் மரங்கள் தண்ணீர், மண் போன்ற எதுவும் இல்லாமல் செழித்து வளருகின்றது! அது போக இந்த கோயில் அய்யரை பார்த்து பேசிகொண்டிருந்தேன் நியுசிலாந்திருந்து ஒரு பெண்மணி இதை அதிசயமாக பார்த்துவிட்டு சென்றாராம், உதவுவதாய் கூறிச் சென்றிருக்கிறார் என்றார்.

கோயில் இருக்கும் இடம் தவிர சுற்றி பிளாட் போட்டு விட்டார்கள், இன்னும் கொஞ்ச நாளில் இதை இடித்தும் விடலாம், கோயிலுக்கு இருந்த சிவ லிங்கம் வெளியில் கிடப்பதை பார்த்தீர்களா? இடது புறமாக பாருங்கள், அதற்கு கீழே தங்கம் இருக்கும் என்று நினைத்து ஒரு குருப் அதை தோண்டி வெளியே எடுத்து வீசி விட்டுச் சென்றிருக்கின்றது.

இடம் காஞ்சிபுரம் அருகே பல்லூர்.





நன்றி Sasi Dharan