ஊருக்கு வெளியே உள்ள மலை அடிவாரத்தில் ஒரு ஜென் ஞானி தங்கி இருந்தார் அவர்
ஒரு பட்டுப்போன பூவரசு மரத்தின் கீழிருந்தார்

சதா தியானத்தில் தினம் தன் வாழ்க்கையை கழிக்கலானார்.
ஊரில் திடீரென்று பஞ்சம் ஏற்படவே சிலர் ஜென் ஞானியிடம் ஓடி வந்தனர். ஊரில் பஞ்சம் வந்த போதும் அவர் ஏதோ நல்ல உடல் ஆரோக்கியதுடனே இருந்தார். இது எப்படி என்றுவந்தவர்களுக்கு புரியவில்லை.
ஊரிலோ பஞ்சம் இவர் தோட்டத்திலோ ஆப்பிள் செரி பழங்கள் என எல்லாமே சோலையாக பூத்தும் காய்த்தும் கனிந்தும் இருந்தது.
பசியால் வந்தவர்களிடம் மௌனியாக இருந்து தன் ஆள்காட்டி விரலை சோலையை நோக்கி காட்டினார். ஓ ஞானி பழங்களை பறித்து உண்ண சொல்கிறார் என்று ஓடிப்போய்எல்லாவற்றையும் பறித்து உண்டனர். இருந்தும் யாருக்கும் பசி அடங்கவில்லை.
அதில் ஒருவன் மட்டும் எந்தப் பழத்தையும் பறிக்காமல் ஞானியிடம் ஓடி வந்தான். ஞானியே அது எப்படி பழங்களை சாப்பிட்டவர்களுக்கு பசியே அடங்கவில்லையே அதுஏன் என்று கேட்டான்.
அதற்கு ஞானி சொன்னார்.
அந்த மரத்தில் உள்ள கனிகள் எல்லாம் உலக போகங்கள் , இச்சைகள் அதை உண்பவருக்கு நிச்சயம் மீண்டும் பசியெடுக்கும் ஆனால் எப்பொழுது நீ அதை தொடாமல் இருந்தாயோ அப்பொழுதே நீயும் என்னைப் போல ஞானியகிவிட்டாய் இனிஉனக்கு பசி என்பதே இருக்காது என்றார் .
உன்னை நீ அறிந்து விட்டால் உலகத்தின் போகத்தில் இனி தேவை இருக்காது இல்லாத ஒன்றிலே இருக்கும் சூட்சுமத்தில்தான் இறை ஜோதியின் அருளும் கருணையும் ஒட்டியிருக்கிறது.
என்னைப் பார் என்னிடம் சொத்தாக உள்ளேயும் வெளியேயும் ஒன்றுமில்லை ஆனால் என்னால் உலகத்திலுள்ள எதையுமே அடைந்து விட முடியும். இனி இந்த ஊருக்கு நான் தேவைப்படாத பொருள்.
நீ ஞானம் பெற்றதனால் நீயே இனி இந்த ஊரை கவனித்துக்கொள் என்று வந்த காரியம் இனிதே நிறைவுற்ற திருப்தியில் ஞானி காற்றில் கரைந்தார்.
இடம் காலம் சூழ்நிலை தக்க சமயத்தில் கேட்ட கேள்வியும் யாரையும் பின்பற்றா நிலையும் ஒருவனை கடவுளுக்கு மேல் ஆக்கும் வித்தையை ஞானியிடம் உணர்ந்து நின்மதியோடு ஊருக்கு புறப்பட்டான் இளைஞன்.
நண்பர்களே இக்கதையை என் அனுபவத்தில் எழுதினேன் இதை எந்த ஞானியும் சொல்லவில்லை என்னை யார் என்று அறியும் முயற்சியில் மட்டும் இறங்காதீர்கள் பதில் உங்களுக்குள்ளேயே ஒளிந்திருக்கிறது என்னிடம் கேள்வியோ பதிலோ இல்லை.
.
ஆக்கம்
உதயகுமார் காங்கேசன்துறை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக