புதன், 26 மார்ச், 2014

தமிழும் - இந்துவேதமும்

தமிழும் - இந்துவேதமும்:

1) தமிழ் ஒலியே வேத ஒலி

2) தமிழ் எழுத்துக்களே இந்துவேத வடிவங்கள்

3) தமிழ்ச் சொற்களே இந்துவேதக் கடவுள்கள்

4) தமிழ்ச் சொற்றொடர்களே! வாக்குகளே! வாக்கியங்களே! வாசகங்களே! 

இந்துவேதக் கடவுள்களை உயிர்ப்பித்து இயக்கும் மந்திரங்கள்

5) தமிழ் மொழியே கடவுளர் மொழி! தெய்வமொழி! தேவமொழி! ஆண்டவர்மொழி!


6) தமிழ்மொழியே அருளுலக ஆட்சிமொழி!


7) தமிழ்மொழியை நன்கு பிழையற்றுப் பேசுவதே கடவுள்களோடு பேசுவதாகும்.


8) தமிழைக் கற்பதே சிறந்த தவம்


9) தமிழைக் கற்பதே சிறந்த பூசை


10) தமிழ்மொழியில் பேசுவதைக் கேட்பதே சிறந்த புண்ணியம்....

என்று இருக்கு வேதத்தில் மிகத் தெளிவாகப் பலநூறு வாக்குகளிலும், வாக்கியங்களிலும் தமிழின் அருமை பெருமை அரிய கடவுட் பண்புகள் அருட்பயன்கள் விளக்கப் படுகின்றன. இதே கருத்துக்கள் 'அசுர வேதம்' (யசுர் வேதம்), 'யாம வேதம்' (சாம வேதம்), 'அதர்வான வேதம்' (அதர்வன வேதம்) ஆகிய மூன்றிலும் தெளிவாகக் கூறப்படுகின்றன.
இவை மட்டுமின்றிச் சுருதி, ஆரணம், ஆகமம், மீமாம்சை எனும் நான்கிலும் நேமம், நியமம், நிடதம், நிட்டை, நீதி, விதி எனும் ஆறிலும், நவநாதம், பதினெண்சித்தம், முப்பத்தாறு ஓதம், தொண்ணூற்றாறு போதம் எனும் நான்கிலும் மற்ற இந்துவேத நூல்களிலும் இந்துமதத்தின் முப்பத்தாறு நூல்களிலும் :
'தமிழ்மொழியைப் பயன்படுத்தித்தான் அருட்பயன்களையும், பொருட்பயன்களையும் அடைய முடியும் என்ற கருத்து மிகமிகத் தெளிவாகவும், ஆணித்தரமாகவும் அழுத்தந்திருத்தமாகவும் வலியுறுத்திக் கூறப்பட்டுள்ளன.

: induism.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக