இரண்டு பூனைகள் ஒரு வீட்டிலிருந்து சிரமப்பட்டு ஒரே ஒரு பணியாரத்தை
திருடி வந்தன.வெளியில் வந்து பங்கு பிரிக்கும் போது அவைகளுக்குள்
வாக்குவாதம் ஏற்பட்டது.
“நான்தான் உள்ளே சென்று எடுத்து வந்தேன்.நீ வெளியில் தானே இருந்தாய்.எனக்குத்தான் அதிகமாக பங்கு வேண்டும்.”

“நான்தான் வெளியில் இருந்து உன்னை எச்சரிதேன்.இல்லையென்றால் நீ
வீட்டுக்காரரிடம் அடி வாங்கியிருப்பாய்,இந்த பணியாரமும்
கிடைத்திருக்காது.அதனால் எனக்குத்தான் அதிக பங்கு வேண்டும்.”
“சரி,இருவரும் சமமான வேலைகளை செய்திருக்கிறோம்.அதனால் இதை சரிபாதியாக பிரித்துக்கொள்வோம்.நானே பிரித்துத்தருகிறேன்.”
“உன் மீது எனக்கு நம்பிக்கை இல்லை.என்னிடம் கொடு.நான் பிரிக்கிறேன்”
“அது முடியாது.உன் மீதும் எனக்கு நம்பிக்கை இல்லை.”
இப்படியாக சண்டை முற்றிக்கொண்டே போனது.அந்த வழியாக ஒரு குரங்கு வந்தது.அது பிரச்சினையைப் பற்றி விசாரித்தது.
“என்ன இங்கு பிரச்சினை?”
பூனைகள் நடந்தவற்றை கூறின.குரங்கு கேட்டது,“உங்களுக்கு என்ன,இதை சரிபாதியாக பிரிக்க வேண்டும் அவ்வளவுதானே?” என்று.
“ஆமாம் குரங்கண்ணே! நீங்களே இதை பிரித்துக் கொடுத்துவிடுங்கள்”
என்று பூனைகள் கூற குரங்கு தராசை எடுத்து பணியாரத்தை இரண்டு துண்டுகளாக பிட்டு இரண்டு பக்கமும் வைத்து எடை போட்டது. ஆனால் ஒருபக்கம் மட்டும் அதிகமாக இருந்தது.
“பூனைகளே,இந்த பக்கம் சிறிது அதிகமாக இருக்கிறது.அதை மட்டும் நான் பிட்டு சாப்பிட்டுக்கொள்ளட்டுமா? ஏனென்றால் அந்த சிறிய துண்டை உங்களுக்கு சரி பாதியாக பிரிப்பது கடினம்.”
“சரி,அண்ணே.நீங்கள் எங்களுக்கு பிரித்து கொடுக்கிறீர்கள்.அதற்கு கூலியாக அதை சாப்பிட்டுக்கொள்ளுங்கள்.”
குரங்கு அதை பிட்டு சாப்பிட்டப்பின் மீண்டும் தராசை வைத்து எடை போட்டது.இப்பொழுது மற்றொரு பக்கம் அதிகமாக இருந்தது.
“இப்போ இந்த பக்கம் அதிகமாக இருக்கிறது.இந்த அதிகமாக இருக்கும் சிறிய துண்டை நான் பிட்டு சாப்பிட்டு விடுகிறேன்...” என்று கூறிய குரங்கு இந்த முறை அவர்களது பதிலை எதிர்பார்க்காமலேயே தின்றது.
பூனைகளுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.குரங்கு பெரியவர் என்பதால் அமைதியாக இருந்தன.
ஆனால் குரங்கு எடை போடும்போதெல்லாம் ஏதேனும் ஒரு பக்கம் அதிகமாகவே இருந்தது.அதனால் அதிகமாக இருக்கும் பக்கங்களில் இருந்து சிறிது பிட்டு சாப்பிட்டுக்கொண்டே இருந்தது.கடைசியில் இருபக்கமும் மிகச்சிறிதளவே இருந்தது.
“இந்த சிறிதளவு பணியாரத்தை வைத்து என்ன செய்யப்போகிறீர்கள்? இதையும் நானே சாப்பிட்டுவிடுகிறேன்.” என்று கடைசியில் அனைத்தையும் குரங்கே சாப்பிட்டுவிட்டது.
“ஆஹா! என்ன சுவை! இப்படிப்பட்ட பணியாரத்தை சாப்பிடடாமல் எனக்கே கொடுத்துவிட்டீர்களே! நன்றி பூனைகளே,வருகிறேன்.” என்று குரங்கு நடையை கட்டியது.
பூனைகள் தங்கள் தவற்றை உணர்ந்தன.
“டேய்! நம்ம ரெண்டு பேரும் ஒற்றுமையாக இருந்திருந்தால் நாமே பணியாரத்தை சாப்பிட்டு இருக்கலாம்.இப்போது அந்த குரங்கு நம்மை ஏமாற்றிவிட்டது.”
“ஆமாண்டா! ‘கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’ என்று பெரியவர்கள் சும்மாவா சொல்லியிருக்கிறார்கள்! இனிமேலாவது நாம் ஒற்றுமையாக இருப்போம்.”
“சரிடா!”
என்று பூனைகளும் நடையை கட்டின.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக