வியாசர் தனது பதினாறுவயதான மகன் சுகரை அழைத்து "உனக்கு ஞானம் கற்று தர ஜனகரே சிறந்த குரு, போய் கற்றுகொண்டுவா..!" என கூறினார்.
சுகர் வருவதை ஞானசிஷ்டியால் அறிந்த ஜனகர் அவரை எந்த வித மரியாதை வரவேற்பும் செய்ய வேணாம் என காவலாளிகளுக்கு கட்டளை விட்டார். சில நாட்கள் அரண்மனை வாசலிலேயே எந்தவித சஞ்சலமும் இல்லாமல் மிக அமைதியாக காத்து இருந்தார்.
பின்னர் மிகவும் கோலாகலமாக வரவேற்று பலபணிபெண்கள் வாசனைநீரில் ஸ்நானம் செய்து மிக விலை உயந்த உடைகள் அணிவித்து அரும்சுவை உணவுகளும் கொடுக்கப்பட்டது சிலநாட்கள். ஆனால் அவர் முகத்தில் சந்தோசமும் இல்லை..! துக்கமும் இல்லை..!
அதன்பின் கோலாகல அரண்மனையில் பல பெண்கள் ஆபாசநடனங்கள் ஆட.., இசைகள் முழங்கும் இடத்துக்கு அழைத்து சென்று "எண்னை நிறம்பி ததுதும்ப ஒரு சிறிய சிட்டியை சுகரின் உள்ளங்கையில் வைத்து.., "இந்த ஆடம்பர மாளிகையை ஒரு துளி என்னையும் சிந்தாமல் ஏழுதரம் சுத்திவா..!" என்றார்.
சுகரும் அப்படியே ஒரு துளியும் சிந்தாமல் கொண்டு வந்து கொடுத்தார். உன் அனுமதி இன்றி மனதில் எதும் நுளைய முடியாது..! உன்னை போன்ற பிரம்மஞானிக்கு நான் எதுவும் கற்று தரதேவையில்லை..! நீ போகலாம் என அன்போடு அனுப்பினார். நன்றி கூறி விடைபெற்றார் சுகர்.
சுகரை
போல் அனைத்தும் ப்ரபிரஹ்ம்மம் என்று உணர்ந்த விட்ட பிரம்மஞானிகளுக்கு
எதற்காக குரு..?
அவர்களின் அனுமதி இன்றி மனதில் எது தான் நுளைந்துவிட முடியும்.
அவர்களின் அனுமதி இன்றி மனதில் எது தான் நுளைந்துவிட முடியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக