மதம் இன்று ஒரு கெட்டவார்த்தையாக மாறிவிட்டது. ‘மதவாதி’ என்று ஒருவனை இன்று சொல்கிறோம் என்றால் மோசமான ஆள் என்று சொல்கிறோம் என்று ஆகிவிட்டது.
அதற்கு காரணம் என்னவென்றால் எல்லா மதங்களிலும் மதவாதிகளிடம் லேபிள் மட்டும்தான் இருக்கிறது. உள்ளே சரக்கே இல்லை. மதம் படித்திருக்கிறார்களா என்றால் இல்லை மதம் பிடித்திருக்கிறார்கள்.
சமயங்கள் அத்தனையும் அடிப்படையான உண்மையாக ஒன்றைத்தான் சொல்கின்றன. உண்மையே இறைவன் என்றால் நாத்திகம் வந்திருக்காது.
இறைவன் உண்மை என்றான் பிரச்சனை வந்துவிட்டது. உண்மை ஒன்றல்ல பார்வையற்றவர்கள் பார்த்த யானை போல உண்மை பலவாக இருக்கிறது. இருப்பது எதுவோ அதுதான் சத்தியம். இறைவனை ஒருவன் நம்புகிறான் என்று சொன்னால்,
அவனால்தான் எல்லா உயிர்களும் படைக்கப் பட்டிருக்கின்றன என்பதை ஒத்துக் கொள்கிறான் என்று சொன்னால் பிற உயிர்களுக்கு எப்படி அவனால் தீமை இழைக்க முடியும்?
இறைவனை எந்த ஞானியும் முழுமையாக உணர்ந்து சொல்ல முடியாது.
ஏனென்றால் மனித மூளையின் செயல்பாட்டுக்கு ஓர் எல்லை உண்டு.
வானவில்லில் ஏழு நிறம் என்கிறோம். ஏழுநிறம்தானா?
அல்ட்ரா வயலட், இன்ஃபரா ரெட் என அது விரிவடைகிறது.
பனிமலை நீரின் மிதக்கிற போது ஒரு முனை தெரியுமே அதுமாதிரியே இறைவனை தெரிந்து வைத்திருப்பது. பௌதீகத்தை கண்டறிவதே இப்படி என்றால் அபௌதீகத்தை எப்படி கண்டறிவான்?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக