வியாழன், 8 மே, 2014

மனதை கட்டுப் படுத்தாவிட்டால்

துறவி ஒருவர் மரத்தின் அடியில் அமர்ந்து தியானத்தில் இருந்தார்.
ஒரு பெண், தினமும் அருகில் இருந்த பாதையில் அவரை கடந்து செல்வாள்.
இது அவரருக்கு சற்று தொந்தரவாக இருந்தது.

மறுநாள், அவர் அந்தப் பெண்ணை பார்க்காமல் இருக்க இரண்டு கண்களையும் துணியால் கட்டிக் கொண்டு தியானத்தில் அமர்ந்தார்.
அந்தப் பெண் மீண்டும் அவரை கடந்து சென்ற போது அவளின் கொலுசு சத்தம் அவரருக்கு தொந்தரவாக இருந்தது.

மறுநாள், அவர் இரண்டு காதுகளையும் சேர்த்து துணியால் கட்டிக்கொண்டு தியானத்தில் அமர்ந்தார்.
அந்தப் பெண் மீண்டும் அவரை கடந்து சென்ற போது அவள் வைத்து இருந்த மல்லிகை பூவின் வாசம் அவரருக்கு தொந்தரவாக இருந்தது.


மறுநாள், அவர் கண், காது மற்றும் மூக்கு என்று அனைத்தையும் துணியால் கட்டிக்கொண்டு தியானத்தில் அமர்ந்தார்.
அந்தப் பெண் வரும் நேரம் வந்தது, ஆனால்அன்று அப்பெண் வரவில்லை. இவருக்கு சந்தேகம் வந்தது.


மூக்கின் மேல் கட்டியிருந்த துணியை சற்று கழற்றி விட்டு நுகர்ந்து பார்த்தார்.
மல்லிகை பூ வாசம் வரவில்லை,
பிறகு,
காதுகளை கட்டியிருந்த துணியை எடுத்து விட்டு உன்னிப்பாய் கவனித்தார்.
கொலுசு சத்தமும் கேக்கவில்லை.
உடனே,
கண்களை கட்டியிருந்த துணியையும் எடுத்து விட்டு பார்த்தார்.
அந்த பெண்ணும் வரவில்லை.
ஏன் அந்த பெண் இன்று வரவில்லை..?
(அப்படியே யோசனையில் மூழ்கினார்)
சற்று நேரம் கழித்து தான் அவருக்கே புரிந்தது.


மனதை கட்டுப் படுத்தாவிட்டால்எங்கு இருந்தாலும் என்ன செய்தாலும் பயனில்லை என்று...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக