உதயணரின் ஒன்பது வாதங்கள் :
உதயணர் தம்முடைய நியாய குசுமாஞ்சலி என்னும் நூலில் கடவுளின் இருப்புத்தன்மையை நிரூபிக்க புகழ்பெற்ற ஒன்பது வாதங்களை முன்வைத்துள்ளார்!! அவற்றைப் பற்றிக் கீழே சுருக்கமாக விளக்க விழைகிறேன்!!
கடவுளை அறிதலின் முடிவு நிலை என்று வர்ணிக்கும் உதயணர் இந்தப் பிரபஞ்சம் என்பது ஒரு செயலின் விளைவாக உண்டாகிய ஒரு பயன் (EFFECT) என்கிறார்!! அவ்வாறு ஒரு பயன் உருவாகும் போது அந்த செயலை உருவாக்கிய ஒரு காரணி (CAUSE) என்ற ஒன்றும் இருந்தே தீரும் என்று சொல்லும் அவர் அதுவே கடவுள் (ISHVARA) என்றும் குறிப்பிடுகிறார்!! இது சம்பந்தமான அவருடைய ஒன்பது வாதங்கள் இதோ!!
1. பயன் நிலை (EFFECT)
பயன் நிலை என்பது ஒரு காரணியால்தான் இயலும் !! பிரபஞ்சத்தின் உருவாக்கம் என்பது அணுக்களாலும் அந்த அணுக்களின் இணைப்பாலுமே உருவாகிறது!! உலகின் இயங்கும் காரணி என்பது எல்லாப் பருப்பொருட்களைப் (MATTER) பற்றிய முழுமையான அறிவால்தான் நிகழ இயலும் !! அவ்வாறான முழுமையான அறிவு என்பது எந்த மனிதனுக்கும் இல்லை என்பதால் அந்த அறிவுநிலையே கடவுளாகிறது ! உருவாக்கப்பட்ட ஒன்று இருந்தால் உருவாக்கியவன் என ஒருவன் இருந்தே தீர வேண்டும் !!!

2. அணுச்சேர்க்கை (COMBINATION)
அணுக்கள் என்பவை சுயநகர்வு இல்லாதவை !! அவை தங்கள் சுற்றுப்பாதையிலேயே இயங்குபவை!! இந்த அணுக்கள் எல்லாம் ஏதோ ஒரு ஒழுங்குமுறையில் இணைந்துதான் பருப்பொருளை உருவாக்குகின்றன!! தானாக எந்த நகர்வும் இல்லாத அணுக்கள் எல்லாம் தன்னுடைய சொந்த முயற்சியில் இணைய நேர்ந்தால் அதில் எந்த ஒழுங்குத்தன்மையும் இல்லாது போயிருக்கும் !! அவை ஒரு ஒழுங்கு முறையுடன் இணைந்தது இன்னொரு வெளி இயக்கத்தால்தான்!! அதுவே கடவுள் !!
3. ஆதாரம் (SUPPORT)
பிரபஞ்சத்தில் அமைந்துள்ள உலகங்களை எல்லாம் தாங்கி நிற்கும் சக்தி ஏதோ ஒன்று கண்டிப்பாக இருக்கவே செய்கிறது!! அவ்வாறு ஒன்று இல்லையென்றால் பிரபஞ்சம் என்பது ஒன்று சேர்ந்த இயக்கமாக (INTEGRATED) இருக்க சாத்தியமில்லை!! அந்த சக்தியே கடவுள் !!
4, சொற்கள் (WORD)
ஒரு சொல்லைக் கேட்கும் போது அது எதைப் பற்றிக் குறிக்கிறது என்பதே அறிவின் ஆரம்ப நிலை (ORIGIN OF KNOWLEDGE). அவ்வாறான அறிவு எல்லா இடங்களிலும் உள்ள எல்லா மொழி பேசும் மனிதருக்கும் தத்தமது மொழியில் உண்டாகிறது!! இந்த அறிவின் ஆரம்ப நிலை என்பது பிரபஞ்ச முழுமைக்கும் ஒன்றாக உள்ளதால் அது மனிதனன்றி பிரபஞ்சத்தைக் கடந்த சக்தியின் தாக்கத்தால்தான் இயலும்!! அதுவே கடவுள் என்கிற சக்தி!!
5.நம்பிக்கை (FAITH)
வேதங்கள் எல்லாமே கடந்த காலம் , நிகழ் காலம் மற்றும் எதிர்காலம் என்கிற மூன்றைப் பற்றியும் உரைக்கின்றன !! அவ்வாறு உரைக்கும் சக்தி மனிதனின் அறிவுக்கு இல்லை!! அதனால் வேதங்கள் என்பதை மனிதனை விட மேம்பட்ட சக்தி ஒன்றே படைத்திருக்க இயலும்!! அந்த சக்தியே கடவுள்!!
6.வேதவசனங்கள் (SCRIPTURES)
வேதங்களின் உட்பொருள் எல்லாம் கடவுட்தன்மையைப் பற்றியே விளக்குபவையாக உள்ளன!! மனிதனுக்குத் தன்னைப் படைத்தது யார் என்று தெரியாத சூழலில் தான் மரணம் அடைவது எதனால் என்பதும் அறியாத சூழலில் வேத வசனங்கள் எல்லாம் மனிதன் உள்ளிட்ட பிரபஞ்சத்தின் பருப் பொருட்கள் அனைத்தையும் படைத்துக், காத்து, அழிப்பவன் இறைவனே என்று சொல்கின்றன!! இதனால் இறைவன் என்னும் சக்தி மெய்ப்பிக்கப் படுகிறது!!
7.அறியுணர்ச்சி (PERCEP)
ஒரு சில நீதிகள் சம்பந்தமான விதிகள் பிரபஞ்ச முழுமைக்கும் பொதுவிதிகளாகவே என்றைக்குமே இருக்கின்றன!! இவை பிரபஞ்சம் முழுதும் பகிரங்க விதிகளாகவே உள்ளன !! இவ்விதிகள் மனிதனால் உருவாக்கப் பட்டவை அல்ல என்னும் போது அவை கடவுளால் உண்டானவையே என்பதும் தெளிவாகிறது!!
8.எண் அறிதல் (SPECIALITY OF NUMBERS)
பிரபஞ்சத்தில் ஒன்று என்கிற எண் மட்டும்தான் இயற்கையானதாக உள்ளது!! மீதி எண்கள் அனைத்தும் உணர்வின் காரணமாகவே உண்டானதாகும்!! உதாரணமாக பிரபஞ்சம் ஒன்று, மனிதன் ஒருவன், அணு ஒன்று இப்படி... ஆனால் ஈரணு என்பது இரண்டு அணுக்கள் சேர்ந்த நிலை என்பதை உணர நேர்வது ஒன்றுக்கும் மேற்பட்ட எண்கள் பற்றிய அறிவு மூலம் உண்டாகிறது!! அவ்வாறான உயரறிவு மனிதனுக்கு இயற்கையில் உருவாகவில்லை!! அந்த அறிவை அவனுக்கு அளித்தது அவனினும் மேம்பட்ட ஒரு சக்தியே ஆகும்!!
9.அறியாநிலை (UNFORESEEN)
மனிதன் தன் செயல்களாலேயே பலன்களை அடைகிறான்!! அவனுடைய சிறப்பும் இழிவும் அவன் செயல்களாலேயே உருவாகிறது!! செயல்களை மட்டும்தான் மனிதன் செய்கிறானே தவிர அந்த செயலின் பலனாக சிறப்பையும் இழிவையும் அவனுக்குக் கொண்டு சேர்ப்பது பிரபஞ்சம் முழுமைக்கும் பொதுவான ஒரு சக்தியாலேயே நடக்கிறது!! அந்த சக்தி எதுவென்பது மனித அறிவால் அறிய முடியாததாகவே இருக்கிறது!! அந்த சக்தியே கடவுள்!!
இன்றைய கடவுள் தத்துவ நூல்களின் ஆதாரப் பொருட்கள் எல்லாமே உதயணரின் தத்துவங்களையே அடிப்படையாகக் கொண்டவை என்பதில் எந்த சந்தேகமுமில்லை!!
#TREASURES_OF_HINDUISM

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக