உபதேசத்துக்காக விடியகாலை வந்த புத்தர். தனது சீடர்கள் முன்னால்
புன்முறுவலோடு அமைதியாக உட்காந்தார். ஒரு தர்மகதையை கூறதொடங்கினார்.
"அந்த மனிதன் நீண்ட பயணத்தை மேற்கொண்டு இருந்தான். போகிறவழியில் ஆறு ஒன்று குறுக்கிட்டது. அங்கே கடந்து செல்ல படகோ பாலமோ இருக்கவில்லை. சிலமரகிளைகளை எடுத்து கட்டுமரம் ஒன்றை தயார் செய்தான். அதை கொண்டு அவன் மறுகரையை அடைந்தான்.

கரையை அடைந்ததும் அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது. இந்த கட்டுமரம் எத்தனை
உபயோகமாக இருந்தது. நான் ஏன் இந்த கட்டுமரத்தை கொண்டு செல்லகூடாது என்று.
அவன் கட்டுமரத்தை தலையில் சுமர்ந்து செல்ல தீர்மானித்தான்."
அத்துடன் கதையை நிறுத்திய புத்த பெருமான் தமது சீடர்களை நோக்கி, ""துறவிகளே.., அந்த மனிதனின் தீர்மானம் சரிதானா.. ?" என்று கேட்டார்.
அவர்கள், "இல்லை பெருமானே..!" என்று பதிலளித்தனர்.
புத்தர் அவர்களின் பதிலில் திருப்தியுற்றவராக,
"ஆம்.., அவன் கட்டுமரத்தை அங்கேயே விட்டு செல்வதுதான் விவேகம். அதுவே தர்மசிந்தனை." என்று தர்மத்தை அவர்களுக்கு போதித்தார்.
உலகில் விரும்பதக்க அத்தியாவசியங்கள் இருக்கலாம். ஆனால் அவை ஆற்றை கடந்தபின் விடவேண்டிய கட்டுமரம் போல்தான். இல்லையெனில் மனதில் சுமைகள் அதிகமாகிபோகும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக