ஞாயிறு, 4 மே, 2014

மதம்

மதம் என்பது ஒரு பகுதியில் தோன்றிய சித்தாந்தங்களின் கோர்வையில் உருவானது, ஆனால் மதத்தில் அடிப்படைவாதமும் கலந்திருக்கும், உதாரணத்திற்கு சித்தாந்தத்திலோ தத்துவங்களிலோ பொய்மை இருக்காது, ஆனால் அவற்றை பயன்படுத்தும் மதங்களில் முழுதும் கலந்திருக்கும், 

மனிதன் நேரடியாக படைக்கப்படவில்லை என்று அறிவியல் கூறுகிறது, சிலர் அதனை எற்றுகொள்வதில்லை, அதற்கு அவர்கள் கூறும் முக்கிய காரணம் மனித பரிணாமத்தின் படிமங்கள் முழுவதும் கிடைக்கவில்லை, ஆதலால் அது வெறும் கற்பனையே ஆதாரம் அற்றது என்று கூறுவார், 

ஆனால் அறிவியலாளர்களோ இன்றைய நவீன உடலியல் துறை முன்னேற்றத்தின் காரணமாக அதனை நிரூபித்து கொண்ட செல்கின்றனர், இதுவரையில் 3 படிமங்கள் கிடைத்தாயிற்று, ஆனாலும் கண்ணை மூடிக்கொண்டு அதனை எதிர்க்கும் மத அடிப்படைவாதிகளோ இன்னும் முழு ஆதாரம் இல்லை என்கின்றனர், 

சரி அவர்கள் கூற்றை ஏற்கலாம் அப்படியெனில் அவர்கள் கூறும் படைப்பாளன் மனிதனை படைத்ததற்கு சிறு அளவிலாவது ஆதாரம் இருக்க வேண்டும் அல்லவா? அந்த ஆதாரங்களை ஏன் கூற தைரியம் இல்லை, 

ஆதாரம் என்று இவர்கள் கூறுவதோ இயற்கையாக நடக்கும் விசயங்களை. இவர்கள் கூறும் படைப்பாளரோ தன்னுடைய படைப்பான மனிதனின் உடலியல் பற்றிய அறிதல் கூட இல்லாமல் சாத்தான் என்று கதை விட்டு பயமுறுத்துகிறார். ஆனால் அதற்கு படைப்பாளர் என்ன செய்வார், ஏன் என்றால் அவை மனிதர்களின் மனோபயத்தின் ஒரு வெளிப்பாடேயாகும். 

அதாவது அவர்களின் மனோபயத்தின் விளைவாக உதித்த கற்பனையே ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக