இயந்திரமயமான உலகம். பரபரப்பான
வாழ்க்கை. இதில் நாமும் ஓடிக் கொண்டேயிருக்கிறோம். மனம் எதையாவது
சிந்தித்துக் கொண்டேயிருக்கிறது.
இதில் தேவைக்காக மட்டுமல்ல, தேவையற்ற ஆசைகளும் நம் மனதை அலைக்கழித்துப் பரபரப்பை உண்டாக்கி விடுகின்றன. மகாபாரதத்தில் மட்டுமல்ல நமக்குள்ளும் தினம் தினம் ஒவ்வொரு நொடியும் குருஷேத்திரப் போர் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஒரு புறம் கோபம், காமம், குரோதம், பேராசை, ஆணவம் போன்ற தீய உணர்வுகளால் நூற்றுக்கணக்கான எண்ணங்கள் மனதில் அலை அலையாய் அணிவகுத்து வந்து குவிந்து கொண்டேயிருக்கின்றன.
மற்றொரு புறம் உண்மை, தர்மம், அமைதி, அன்பு, அஹிம்சை என்ற ஐந்து நற்பண்புகள் அவற்றை எதிர்த்து போராடிக் கொண்டேயிருக்கின்றன. நல்லவன், கெட்டவன் என்ற பேதமின்றி அனைவருக்குள்ளும் இந்தப் போராட்டம் நிகழ்ந்து கொண்டுதானிருக்கிறது. மனிதனின் உண்மையான இயல்பு சத்துவ குணம்தான். ஆனால், மற்ற இரண்டு குணங்களின் ஆதிக்கமுள்ளவனை கெட்டவன் என்று சொல்கிறோம். அத்தகைய மனிதனைச் சார்ந்து வாழ்பவர்களுக்கு அவன் நல்லவனாகவே இருக்கிறான். எனவே எத்தகைய மனிதனாக இருந்தாலும் அவனுக்குள் இந்த இரண்டு அணிகளுக்குமான போராட்டம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஏனெனில் அவனுக்குள்ளும் உண்மை இயல்பான சத்துவகுணம் இருக்கத்தான் செய்கிறது.

எனவே மனிதர்களாகிய நமக்குள் நிகழும் இந்த யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான
எண்ணங்கள் மோதிக் கொள்கின்றன.
நல்ல குணங்களிடமிருந்து எழும் நல்ல எண்ணங்கள் தீய எண்ணங்களோடு இடைவிடாமல் போரிடுகின்றன. நமக்கு நல்வழி காட்டக் கூடிய வல்லமை படைத்த துரோணர், பீஷ்மரைப் போன்ற இந்திரியங்கள் கூட தீய எண்ணங்களின் வசம் சேர்ந்து கொள்கின்றன. இந்தப் போரில் ஆன்மாவாகிய கடவுள் ஈடுபடுவதே இல்லை. அவர் வெறும் சாட்சியாக உடலெனும் தேரை நடத்தும் சாரதியாகவே இருக்கிறார். எனினும் அவ்வப்பொழுது அறிவில் தெளிவாகத் தோன்றி நல்ல எண்ணங்களுக்கு வழிகாட்டியாக அமைகிறார். அஸ்தி என்றால் எலும்பு. அஸ்தினாபுரம் என்றால் எலும்புகளின் நகரமாகிய நம் உடல்தான். அஸ்தினாபுரத்திற்கு ஒன்பது வாசல்கள் உண்டு. நம் உடலெனும் நகரத்திற்கும் ஒன்பது வாசல்கள் உண்டு. இப்படி நல்லெண்ணங்களும், தீய எண்ணங்களும் இடைவிடாமல் போராடினாலும் இறுதியில் அது நன்மைக்கே சொந்தமாகிறது. அதைப் போல தீய பண்புகள் நம் உடலை மாறி மாறி வசப்படுத்த முயன்றாலும் நல்லவையே நம்மை ஆள வேண்டும் என்பதற்காகவே யோக சாஸ்திரம் வழி காட்டுகிறது. அதுவே தியானம்.
இப்படிப்பட்ட இடைவிடாத போராட்டத்திற்கிடையில் அமைதியாக தியானம் செய்வது என்பது சிரமம்தான். யுத்த பூமியில் எல்லாவற்றையும் கீழே போட்டு விட்டு அர்ஜுனன் சரண்டைவது போல நாமும் நன்மை, தீமை இரண்டையும் விடுத்து, எண்ணங்களைத் துறந்து அமைதியடைவதுதான் மேன்மையடைவதற்கு ஒரே வழி. அதற்கு தியானம் அவசியமாகிறது. இது ஒரே நாளில் வாய்த்து விடுவதில்லை.
அதற்கு விடாமுயற்சியையும், தன்னம்பிக்கையையும், வைராக்கியத்தையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். இது பயிற்சியினாலேயே அமையும். எனவே மனம் தளராமல் தினமும் பத்து நிமிடம் உடலையும், மனதையும் தளர்வாக வைத்துக் கொண்டு அமர்ந்து பழக வேண்டும். உடலைத் தளர்ச்சியாக என்றால் இயல்பாக எந்த வித பரபரப்புமின்றி என்று பொருள். மனம் தளர்வாக அமரும் இவ்வேளையில் எண்ணங்கள் அலையலையாக வந்து மோதும். ஏனென்றால் நாம் எப்பொழுதுமே இவற்றை கவனிக்காமல், உணராமல் புலன் உணர்வில் திளைத்து இருந்தோம். இப்பொழுது அமைதியாகக் கண்களை மூடி புலன்களின் கட்டுகளில் இருந்து விடுபடும் பொழுது, இந்த எண்ணங்கள் அனைத்தும் நம் கவனத்திற்கு வருகின்றன. எனவே அதைக் குறித்து சிறிதும் கலங்காமல் வெறும் சாட்சியாக அவற்றைப் பார்த்க் கொண்டே இருக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.
யாரும் கவனிக்காத போது தைரியமாக நுழையும் திருடன், யாராவது பார்த்து விட்டால் எப்படி ஓடி விடுகின்றானோ, அது போல இதுவரை நாம் கவனிக்காததால் இஷ்டம் போல ஆட்டம் போட்ட எண்ணங்கள், நாம் கவனிக்கிறோம் என்று தெரிந்தவுடன் ஒவ்வொன்றாக ஓடி மறைய ஆரம்பிக்கும். கூத்தாடியை ஒத்த எண்ணங்கள் மெல்ல மெல்ல ஓய்ந்து அழிந்து போகும். இதுதான் தியானத்தின் ஆரம்ப நிலை. எத்தனையோ கோடி எண்ணங்கள், அவையெல்லாம் அடங்க சற்று காலம் பிடிக்கத்தான் செய்யும். எனவே மனந்தளராமல் முயற்சி செய்வது அவசியம்.
தினமும் காலை, மாலை இப்படி ஒரு கால் மணி நேரம் பயிற்சி செய்து வரும் பொழுது எண்ணங்கள் குறைந்து வருவதை உணரலாம். இந்நிலையில் மனம் வேறு பலவகையான பொருட்களைப் பற்றிய சிந்தனையில் மாறி மாறி அலைந்து விடாமல் இருக்கவே தெய்வ வடிவங்களையோ, மந்திரங்களை சிபாரிசு செய்கிறார்கள். மனதின் ஒருமுனைப் பாங்குக்கு இவை உதவுகின்றன.
இப்படியே பழகிக் கொண்டே வரவர மனம் அடங்கி தியானம் எளிதில் வசப்படும் காலமும் கூடி வரும். எனவே தியானத்தில் அமரும் பொழுது பலவிதமான எண்ணங்கள் வெள்ளம் போலக் கரைபுரண்டு வருகின்றன என்று கவலை கொள்வதோ, முயற்சியை விட்டு விடுவதோ கூடாது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக